போலீஸ் சீருடையுடன் கைதி

Started by aruljothi, Jul 28, 2009, 09:18 PM

Previous topic - Next topic

aruljothi

கள்ளக்குறிச்சி: வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட கைதி, போலீசாரின் "தாக சாந்தி' ஆசையால் போலீஸ் உடையுடன் தப்பி ஓடினார். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த சின்னசேலத்தைச் சேர்ந்தவர் மாரி.

இவரது மகன் சரவணன்(27). பெரம்பலூர் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய வழக்கு தொடர்பாக மங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது, சின்னசேலம் போலீஸ் சரக பகுதியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று முன்தினம் சின்னசேலம் போலீஸ் ஏட்டுக்கள் விஸ்வநாதன், நடராஜ் இருவரும் திருச்சி மத்திய சிறையிலிருந்து, சரவணனை அழைத்து வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தி, மீண்டும் சிறையில் அடைக்க திருச்சிக்கு அழைத்துச்சென்றனர். திருச்சி சத்திரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கிய போலீசார் சீருடையை கழற்றி வைத்து, கைதியிடம் கொடுத்துவிட்டு, சாதாரண உடையில் மது அருந்த சென்றனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கைதி சரவணன், போலீஸ் உடையுடன் தப்பிவிட்டார். தாகசாந்தியை முடித்துக் கொண்டு சாவுகாசமாக வந்த போலீசார், கைதி தப்பியோடியதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். கைதி தப்பி ஓடியது தொடர்பாக திருச்சி கன்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்துள்ளனர்.