அதிக எடை கொண்ட கிரீடங்களால் ஏழுமலையான் சĬ

Started by aruljothi, Jul 28, 2009, 09:18 PM

Previous topic - Next topic

aruljothi

திருமலை: திருமலை வெங்கடாஜலபதி சிலைக்கு அதிக எடை கொண்ட கிரீடம் அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளதாக அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


திருமலை வெங்கடாஜலபதி கோவிலில் பக்தர்கள் ஏராளமான நகைகளையும், பணத்தையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். தற்போது, வெங்கடாஜலபதிக்கு அணிவிப்பதற்காக மட்டும் 11 டன் அளவுக்கு தங்கம், வெள்ளி, வைர, வைடூரிய நகைகள் உள்ளன. தினமும் ஏழுமலையானுக்கு 60 முதல் 70 கிலோ எடையுள்ள நகைகள் அணிவிக்கப்படுகின்றன. இதுமட்டுமல்லாமல் 30 கிலோ எடை கொண்ட வைர கிரீடமும் அணிவிக்கப்படுகிறது. இவ்வளவு எடை கொண்ட நகைகளை எட்டு அடி உயரமுள்ள மூலவருக்கு அணிவிக்கப்படுவதால் சிலையில் விரிசல் ஏற்படும் அபாயம் உள்ளது என, அர்ச்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


சிலையை பாதுகாக்கும் பொருட்டு தினமும் சந்தனமும், புணுகும் பூசப்படுகிறது. இருப்பினும் பெரிய தொழிலதிபர்கள் தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்ற அதிகளவு எடை கொண்ட கிரீடங்களை காணிக்கையாக அளிக்கின்றனர். சமீபத்தில் கர்நாடக அமைச்சர் ஒருவர், 34 கிலோ எடை கொண்ட வைர கிரீடத்தை திருமலை கோவிலுக்கு வழங்கினார். அதிக எடை கொண்ட கிரீடத்தை ஒரு அர்ச்சகரால் தூக்கி, ஏழுமலையானுக்கு அணிவிப்பது மிகவும் சிரமம். இவ்வளவு எடைகொண்ட கிரீடம் தவறி கீழே விழுந்தால், பக்தர்களின் மனம் சங்கடப்படும். எனவே, காணிக்கை அளிப்பவர்கள் குறைந்த எடை கொண்ட நகைகளை அளித்தால் கையாளுவதற்கு எளிதாக இருக்கும் என, திருமலை தேவஸ்தான அர்ச்சகர்கள் தெரிவித்துள்ளனர்.