புது செக்ஸ் புரட்சி...தகிக்கும் திருப்பம்

Started by aruljothi, Jul 06, 2009, 12:31 PM

Previous topic - Next topic

aruljothi

"கே...' என்ற வார்த் தைக்கு ஒழுக்கக்கேடான மனிதர் என்று தான் இதுவரை பொருள் இருந்தது; இனி அதற்கு தனி கவுரவம் வந்து விட்டது. ஆம், 18 வயதுக்கு மேற்பட்ட ஆணுடன் ஆணும், பெண்ணுடன் பெண்ணும் செக்ஸ் வைத்துக்கொள்வதில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளது டில்லி ஐகோர்ட்; பச்சைக்கொடி காட்டியவர், இதன் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா.


சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக இருந்தபோது சாதனை தீர்ப்புகளை தந்த அவர் இப்போது, பெரும் சமுதாய புரட்சிக்கதவை திறந்து விட்டுள்ளார். "கே' என்ற ஓரினச்சேர்க்கை பிரியர்கள், பல ஆண்டுக்கு முன்பே, அமெரிக்காவில் ஆரம்பித்து பல நாடுகளிலும் பரவி விட்டனர். இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சமீப காலமாகத்தான் வேரூன்றத்துவங்கியது. அமெரிக்காவில் கூட, இன்னும் சில மாநிலங்களில் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கவில்லை. உலகிலேயே வலுவான, பாரம்பரிய கலாசார பெருமை கொண்ட நாடான இந்தியாவில், "கே'க்களின் போர்க் கொடி சமீப ஆண்டாக பெரிய அளவில் தலைதூக்கியது. சில அமைப்புகளும், பிரபல நடிகர், நடிகைகள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்களும் கூட ஆதரவு குரல் கொடுத்தனர். ஓரினச்சேர்க்கைக்கு தடை விதிக்கிறது, பிரிட்டீஷ் ஆதிக்கத்தின் போது போடப் பட்ட சட்டம். இந்திய குற்ற தண்டனை சட்டம் 377 ம் பிரிவு தான் , ஓரினச்சேர்க்கை பிரியர் களுக்கு தண்டனை தரும் சட்டம். 2001 ல் முதல் குரல்: இதை எதிர்த்து, முதன் முதலாக, தன்னார்வ தொண்டு அமைப்பு' நாஸ்' 2001 ல் குரல் கொடுத்தது. அப்போது, டில்லி ஐகோர்ட்டில் வழக்கும் போடப்பட்டது. "சட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும் என்பதற்கு வலுவான காரணம் இல்லை' என்று 2004ல், கோர்ட் தள்ளுபடி செய்தது. அதே ஆண்டு டிசம்பர் மாதம், "நாஸ்' அமைப்பு, சுப்ரீம் கோர்ட்டை அணுகியது. மனுவை ஐகோர்ட்டுக்கு மீண்டும் அனுப்பி,"தகுதி அடிப்படையில் பரிசீலிக்கலாம்' என்று சுப்ரீம் கோர்ட் கூறியது.


இந்த மனு மீது தான் கடந்த வியாழன் கிழமை அன்று டில்லி ஐகோர்ட்,"377 வது சட்டப்பிரிவில் சில அம்சங்கள் நீக்கப்படுகிறது' என்ற புரட்சிகரமான தீர்ப்பை அளித்துள்ளது. இதன் மூலம், "கே'க்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்து விட்டது. கோர்ட் கூறியது என்ன? "ஹோமோசெக்சுவாலிட்டி' எனப்படும் ஓரினச்சேர்க்கை "உடல் ஊனத்தில் ஒன்றல்ல; அது மன நோய் அல்ல' என்று, மனநோய் மருத்துவ குறிப்பேட்டில் இருந்து தவறான குறிப்பு நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பும், மனநோய் பட்டியலில் இருந்து ஓரினச் சேர்க்கையை 1992 ல் நீக்கியது. ஆண் - பெண் செக்ஸ் பரிமாறும் "ஹெடரோசெக்ஸ்' மற்றும் "ஹோமோசெக்ஸ்' இரண்டின் மூலமும் எய்ட்ஸ் நோய்க்கான "எச்ஐவி' கிருமி பரவுகிறது. மேலும், எச்ஐவி., கிருமி பரவுவதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன; செக்ஸ் பரிமாற்றம் என்பது அவற்றில் ஒன்று தான். ஹோமோசெக்ஸ் - எச்ஐவி., பரவுவது இரண்டுக் கும் இடையே தொடர்பு உள்ளது என்று எந்த வித அறிவியல் மருத்துவ ஆய்வும் தெரிவிக்கவில்லை. ஒழுக்கக் கேடானது என்று வலுவாக காரணம் கற்பித்தாலும், தனிப் பட்ட ஒருவரின் அடிப்படை உரிமை, தனி விருப்பத்தில் ஊடுருவவோ, தடுக்கவோ வலுவான காரணமாக அதை கருத இடமில்லை. அரசியல் சட்டத்தை தெளிவுபடுத்தும் பொறுப்பு நீதித்துறைக்கு தான் உண்டு. அரசுக்கு, காலகட்டத்துக்கு ஏற்ப மாற்றங்களை உணர்த்தும் பொறுப்பு உள்ளது. சட்டம் என்பது குறுகியதாகவும், கட்டுப்பாடான போக்கிலும் இருக்கக்கூடாது. காலத் துக்கு ஏற்ப மாற வேண்டும். இப்படி தலைமை நீதிபதி ஷா தலைமையிலான பெஞ்ச் கூறினாலும், இறுதி முடிவு அரசின் கையில் தான். ஆனால் அரசும் ஆதரவாகவே உள்ளதாக தெரிகிறது.


அரசுக்கு தலைவலி ஓய்ந்தது: "கே'க்களுக்கு சுதந் திரம் அளிக்கும் விஷயத்தில், சமீப காலமாக பெரும் போராட்டங்களை சந்தித்துவரும் அரசுக்கு இந்த விஷயத் தில் என்ன முடிவெடுப்பது என்று குழம்பிக்கொண்டிருந் தது; ஐகோர்ட் தீர்ப்பால் பாதி தலைவலி நீங்கி விட்டது. எதிர்பார்த்தபடியே, சில தலைவர்களும், மத அமைப்புகளும் ஒட்டுமொத்தமாக, ஓரினச்சேர்க்கையினருக்கு பச்சைக்கொடி காட்டியதை கடுமையாக எதிர்த்து கருத்து கூறியுள்ளனர். ஆனால், ஆளும் காங்கிரசோ, முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.,வோ அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் வெளியிடவில்லை என்பதன் மூலம், இந்த விஷயம் எந்த அளவுக்கு பற்றியும் என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த விஷயத்தில், தப்பிக் கவே வழி தேடுகிறது மத்திய அரசு. ஐகோர்ட் தீர்ப்பை ஆதரிக்க வேண்டும் என்று தான் அதன் விருப்பம். அதே சமயம், எதிர்ப்பு தானாகவே அடங்கி, அவர்களுக்குள் ஒரு கருத்து உருவாகி, அதன் பின் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நி�னைக்கிறது. இதற்கேற்ப, மத்திய அரசுக்கு ஐகோர்ட் சில யோசனைகளை கூறியுள்ளது. "கட்டாயப் படுத்தி நடக்கும் ஓரினச் சேர்க்கை, 18 வயதுக்கு கீழான சிறுவர்களுடன் செக்ஸ் போன்ற ஒழுக்கக்கேடான செக்ஸ் தடை நீடிக்கிறது. அதற் காக, 377 ஐ ரத்துசெய்து விட்டு, இந்த குற்றம் தொடர்பான பிரிவுகளை வேறு குற்ற தண்டனை சட்டத்தில் சேர்த்து விடலாம்' என்பது தான் அது. இதைத்தான் அரசும் செய்யப்போகிறது.


அதுவரை, சத்தம் அடங்க காத்திருக்கவே செய்யும். பார்லிமென்டில் விவாதம் நடந்தாலும், அப்போதைக்கு பதில் சொல்லி தப்பிக்கொள்ளும். இந்தியாவில் இரண்டு கோடி: இந்திய தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு சார்பில் நிபுணர் குழுக்கள் சில ஆண்டு முன் எடுத்த கணக்கில் ஆணுடன் ஆண் செக்ஸ் வைப்போர் எண்ணிக்கை 25 லட்சம் என்று கூறியுள்ளது. ஆண், பெண் இரு பாலரிலும், ஓரினச்சேர்க்கை பிரியர் களை கணக்கிட்டால், இப்போது இரண்டு கோடியை எட்டும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவில் 13 சதவீதம் பேர் வரை ஓரினச் சேர்க்கை யாளராக இருக்கின்றனர். அமெரிக்காவில் பெரும் பாலான மாநிலங்கள், ஐரோப் பிய நாடுகள், மத்திய ஆப்ரிக் கா, மத்திய, கிழக்கு ஆசிய நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சீனா, பிரேசில், ரஷ்யா ஆகியவை உட்பட 115 நாடுகளில் ஓரினச் சேர்க்கைக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆப்ரிக்க, மத்திய கிழக்கு, தெற்காசிய நாடுகள் உட்பட 80 நாடுகளில், இது சட்டவிரோதம் என்று கூறி , கடுமையான தண்டனை அளிக்கின்றன. தென் ஆப்ரிக்கா, பெல்ஜியம், நெதர்லாந்து, நார்வே, ஸ்பெயின், சுவீடன், கனடா, ஆறு அமெரிக்க மாநிலங்கள் ஆகியவற்றில் ஓரினச்சேர்க்கையினர் தங்களுக்குள் திருமணம் செய்து தம்பதியாக வாழ அனுமதி உள்ளது.


ஓரினச்சேர்க்கை தம்பதிகள், குழந்தையை தத்தெடுத்து வளர்க்கவும் கூட தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல், ஐஸ்லாந்து, பிரிட்டன், ஸ்பெயின், சுவீடன் உட்பட 10 நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இனி தான் ஆரம்பம்: திருமணம் ஆகாமலேயே கணவன் - மனைவியாக வாழலாம் என்று சட்ட அங்கீகாரம் கிடைத்தாலும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், இதுபோன்ற தம்பதிகளுக்கும் பொருந்தும் என்று கோர்ட் கூறியுள்ளது. தாலி கட்டாமல் மனைவியாக வாழ்ந்த பெண்கள் சிலர், தாலி கட்டாத கணவனிடம் ஜீவனாம்சம் கேட்டு போராடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை மறந்து விட முடியாது. ஓரினச்சேர்க்கை பிரியர்கள் எல்லாரும் அதன் முதல் தலைமுறையினர் தான். பெரும்பாலும், முப்பதுக்குள் இருப்பவர்கள். அவர்களுக்கு இப்போதுள்ள குஷி இன்னும் சில நாளில் மறையலாம்; ஆனால், புதுப்புது தலைவலிகள் ஆரம்பமாகி விடும் என்பது மட்டும் உறுதி. இது குறித்து சென்னை சகோதரன் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் குணசீலன் தெரிவித்தது: பெண் தன்மை கொண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள், தங்களை பெண்கள் போல் நினைத்துக் கொள்கின்றனர். இவர்கள் அரவாணிகளாக மாறி தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்ஆண் தன்மை கொண்ட ஓரினச் சேர்க்கையாளர்கள் - "ஜிம்'முக்கு சென்று கூட தங்களை ஆண் போல் வைத்துக் கொள்வார்கள்.


அவர்களது பாலியல் ஈர்ப்பு ஆண்கள் மீதுதான் இருக்கும்.இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கீழ்த்தரமாகவும், கேவலமாகவும் சித்தரிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் இழிவான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். ஐகோர்ட் தீர்ப்பு இந்நிலையை மாற்றியுள்ளது.எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாக இவர்களை அணுக முயற்சி செய்யும் போது, அவர்கள் வெளியில் வரத் தயங்குகின்றனர். அவர்கள் மீது மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. 377 சட்டத்தை நீக்குவதன் மூலம் எச்.ஐ.வி., பரவாமல் தடுக்கக்கூடிய தகவல்களை அவர்களுக்கு எடுத்து செல்ல முடியும்' என்றார். சென்னையை சேர்ந்த இந்திய சமுதாய நலவாழ்வு நிறுவனத்தின் அமைப்பு செயலர் ஹரிஹரன் கூறியது: ஓரினச்சேர்க்கை குற்றம் என்று கருதப்பட்டதால், பலர் வெளிவரத் தயங்கினர். இனிமேல் அவர்கள் வெளிவர தடையில்லை என்பதால், வெளிவருவார்கள். அதேநேரத்தில், சம்மதம் இல்லாமல் வலுக்கட்டாயமாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுத்துவதோ, 18 வயதுக்கு கீழே உள்ளவர்களிடம் இதுபோன்ற பாலியல் உறவு வைத்துக் கொள்வதோ, தண்டனைக்குரிய குற்றம்தான். ஆகவே 377 சட்டம் நீக்கப்பட்டால், அது ஓரினச்சேர்க்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்காது. தற்போது வீட்டை விட்டு வெளியேற்றப்படும் ஆண் ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் அரவாணிகள் தங்கள் சொத்துரிமைகளை மீட்க முடியாமல் உள்ளனர்.  அவர்கள் உடன் பிறந்தவர்களால் புறக்கணிக் கப்படுகிறார்கள். சட்டத்தின் முன் அவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சொத்துரிமை கிடைக்க இந்த சட்டம் நம்பிக்கை அளித்துள்ளது' என்றார்.


"ஹோ...' போட்டது யாரு?: ஓரினச்சேர்க்கை பிரியர்களை அடுத்து பெரிதும் குஷியாக இருப்பவர்கள் இடதுசாரி கட்சியினர் தான். காங்கிரஸ், பா.ஜ.,கருத்துக்களை வெளிப்படையாக சொல்ல தயங்கி இருந்த நிலையில்,"காலத்திற்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும்; இது வரவேற்கத்தக்கது தான்' என்று மார்க்சிஸ்ட் பொதுச்செயலர் பிரகாஷ் கராத், இந்திய கம்யூனிஸ்ட்டின் ராஜா அதிரடியாக கருத்து கூறினர். காங்கிரசில் சில அமைச்சர்கள் ஆதரவாக கருத்து கூறினர். அதுபோல, பா.ஜ.,வில் வெளிப்படையாக முரளி மனோகர் ஜோஷி மற்றும், பரிஷத் தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர். "இது ஒன்றும் கவனிக்கத்தக்க விஷயம் இல்லையே' என்று ஐக்கிய ஜனதா தளம் ஒதுங்கி விட்டது. பாலிவுட்டில் நடிகை செலினா ஜெட்லி, ஜான் அப்ரஹாம், ஆமீர் கான் உட்பட சிலர் ஆதரவு கருத்து தெரிவித்துள்ளனர். "ஓரினச்சேர்க்கையை அங்கீகரிக்க வேண்டும் என்று கோரிய மனுவில் நான் கையெழுத்திட்டுள்ளேன்' என்று பிரபல இந்துஸ்தானி பாடகி சுபா முத்கல் கூறினார். தீர்ப்பு மூலம், ஓரினச்சேர்க்கை பிரியர்களுக்கு போலீஸ் தொல்லை நீங்கியது என்று பிரபல சட்டநிபுணர் சொராப்ஜி கூறியுள்ளார்.