போலி கிரெடிட் கார்டுகள் மூலம் மோசடி: இருவ

Started by aruljothi, Jul 04, 2009, 09:44 PM

Previous topic - Next topic

aruljothi

கோவை:போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட சென்னையைச் சேர்ந்த இருவர் கோவையில் நேற்று கைது செய்யப்பட்டனர். சென்னை, பிராட்வே, அங்கப்பன்நாயக்கர் வீதியை சேர்ந்த ரகுமான்(36) மற்றும் சென்னை மண்ணடியை சேர்ந்த கலிமுதீன்(27) இருவரும் எலெக்ட்ரானிக் பொருட்களை கோவையில் வாங்கி, சென்னை பர்மா பஜாரில், குறைந்த விலைக்கு விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து சந்தேக மடைந்த வியாபாரிகள் சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைதொடர்ந்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.இந்நிலையில், நேற்று மாலை கோவை அவினாசி ரோடு, அண்ணா சிலை அருகே "ஸ்விப்ட்' காரில்(டி.என்.18, 1681) வந்தவர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது காரில் இருந்து இருவர் தப்பியோடினர். சந்தேகமடைந்த போலீசார் காரில் இருந்த மேலும் இருவரை பிடித்து விசாரித்தனர். போலி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, கோவையில் எலெக்ட்ரானிக் பொருட்களை கொள்முதல் செய்தது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்கிய ரகுமான், கலிமுதீன் கைது செய்யப் பட்டனர். அவர்கள் பயன்படுத்திய கார், போலியாக பயன்படுத்திய 17 கிரெடிட் கார்டுகளையும், இரு மொபைல் போன்களையும் பறிமுதல் செய்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார் தப்பியோடிய ஜான்சன், அந்தோணியை தேடிவருகின்றனர்.