தி.மு.க., எம்.பி., பேச்சால் காங்கிரஸ் கோபம்

Started by aruljothi, Jul 04, 2009, 09:44 PM

Previous topic - Next topic

aruljothi

 ""செய்யாத வேலைக்கு பணம் கொடுக்கச் சொல்லி நிர்பந்திக்காரு வே...!'' என்று கூறியபடி பெஞ்சில் பேச ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி. ""கான்ட்ராக்ட் விவகாரமா ஓய்...'' என்று கேட்டார் குப்பண்ணா. ""ஆமாம் வே... குளச்சல் கடற்கரையில் கடல் அரிப்பைத் தடுக்க, 19 கோடி ரூபாய் செலவில் கல் போட மீன்வளத் துறை டெண்டர் விட்டது... இந்த வேலைக்கு அனுபவமும், தகுதியும் இல்லாத ஒருத்தர், இன்னொரு நிறுவனத்திடம் உப கான்ட்ராக்ட் செய்த அனுபவம் இருப்பதா கடிதம் வாங்கி, டெண்டரையும் வாங்கிட்டார்...


""ஆனா, வேலையே செய்யலை... இதனால, மீன்வளத் துறையும் அந்த கான்ட்ராக்டருக்கு பல நோட்டீஸ்களை அனுப்பியது... அபராதமும் விதிச்சது... எதையும் கண்டுக்காத கான்ட்ராக்டர், இப்ப பில் போட்டு வந்து கொடுத்து, செய்யாத வேலைக்கு பணத்தை தரச் சொல்லி கேக்காரு... இவரை கறுப்புப் பட்டியலில் வைக்க நினைத்த அதிகாரிகள், கேட்பது காடுகளை காக்கற மந்திரியோட மகன் என்பதால, பயந்து போய் என்ன செய்யறதுன்னு தெரியாம முழிக்காங்க வே...'' என்றார் அண்ணாச்சி.


""சரியான ஆட்களை போடாததால, பத்துக்கும் மேலான பணியிடங்கள் ரத்தாகிடுச்சுங்க...'' என்று அடுத்த விவகாரத்தை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.


""எந்த துறையில பா...'' என்று கேட்டார் அன்வர்பாய்.