இரு கைகளால் ஐந்து மொழிகளில் எழுத திட்டமĮ

Started by Sudhakar, Oct 24, 2008, 01:41 AM

Previous topic - Next topic

Sudhakar

கோவை: இன்ஜினியர் ஒருவர், இரு கைகளால் ஐந்து மொழிகளில் 25 மணி நேரம் எழுதி கின்னஸ் சாதனை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.

கோவை, மாநகராட்சி மின்சார பிரிவில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருபவர் அமானுல்லா (58); இரண்டு கைளாலும் எழுதும் பழக்கம் கொண்டவர். ன்னஸ் சாதனைக்காக ஐந்து மொழிகளில் எழுத உள்ளார். இந்த விருப்பத்தை  கின்னஸ் நிறுவனத்திற்கு ஒரு ஆண்டுக்கு முன் கடிதம் மூலம் தெரிவித்தார். தற்போது, கின்னஸ் சாதனை செய்ய அனுமதி கடிதம் வந்துள்ளது.

இதுகுறித்து அமானுல்லா கூறியதாவது:
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது இடது கையால் எழுதுவேன். சக மாணவர்கள் என்னை கேலி செய்தனர். பின், வலது கையில் எழுதவும் கற்றுக் கொண்டேன். தோடு இரண்டு கைகளாலும் எழுதும் பழக்கத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்.

கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் எழுதி பாராட்டு பெற்றுள்ளேன். 'சாதனை மாமணி', 'சாதனை வித்தகர்'  'சாதனை கலை வித்தகர்' போன்ற விருதுகளை பெற்றுள்ளேன்.

இரு கைகளால் எழுவதோடு மட்டுமல்லாது, பாட்டு கச்சேரியில் 30 ஆண்டுகளாக பாடி வருகிறேன். இலக்கிய மன்ற பேச்சாளராகவும் உள்ளேன். பள்ளி கல்லூரிமாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் சுய முன்னேற்ற நிகழ்ச்சிகளிலும் பேசியுள்ளேன்.

கின்னஸ் சாதனைக்காக தமிழில் பகவத் கீதை, ஆங்கிலத்தில் பைபிள், அரபியில் குரான், உருது மொழியில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் கம்பராமாயணம் ஆகியவற்றை எழுத திட்டமிட்டுள்ளேன். ஐந்து மொழிகளிலும், ஐந்து மணி நேரம் வீதம் 25 மணி நேரம் தொடர்ந்து இரண்டு கைகளாலும் எழுதுகிறேன்.

இரண்டு கைகளாலும் எழுதும் சாதனை நிகழ்ச்சி இன்னும் 15 நாட்களில் இடம், தேதி, யார் முன்னிலையில் சாதனை நிகழ்த்தப்படும் என்பது குறித்த விபரங்கள் அறிவிப்பேன். தமிழில் 1330 திருக்குறளையும் தலைகீழாக சொல்ல முயற்சி மேற்கொண்டுள்ளேன். இவ்வாறு அமனுல்லா தெரிவித்தார்.