News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

குடோன்களில் பதுக்கிய ரூ.1.5 கோடி பட்டாசு

Started by aruljothi, Jul 28, 2009, 09:19 PM

Previous topic - Next topic

aruljothi

சிவகாசி: சிவகாசி அருகே லைசென்ஸ் இல்லாத குடோன்களில் பதுக்கி வைத்திருந்த 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அனுமதி இன்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்காத டவுன் இன்ஸ்பெக்டரும் உடனடியாக மாற்றம் செய்யப்பட்டார்.

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 18 பேர் பலியாகினர். நேற்று முன்தினம் விஸ்வநத்தத்தில் வீட்டில் ஒருவர் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த போது பட்டாசு வெடித்து பலியானார். பட்டாசு தயாரிப்பில் விதி மீறலால் உயிரிழப்பு ஏற்படுவது தொடர்கதையாகிறது. இதனை கட்டுக்குள் கொண்டுவர அரசு உத்தரவிட்டுள்ளது. நேற்று விஸ்வநத்தத்தில் அனுமதியின்றி குடோன்களில் பல கோடிரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் இருப்பு வைத்துள்ளனர் எனப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

டி.எஸ்.பி., ராஜகோபால் தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். சிவகாசி சாட்சியாபுரம் தர்மகாந்தன் (45) என்பவர் லைசென்ஸ் காலாவதியான பழைய கட்டடத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். இதற்கு அனுமதி பெறவில்லை. வி.ஏ.ஓ., சீனிக்காளை புகாரில் டவுன் போலீசார் குடோனுக்கு சீல் வைத்தனர். விஸ்வநத்தம் மெயின் ரோட்டில் கருமன், குரு, ரமணி ஆகியோருக்குச் சொந்தமான மூன்று குடோன்களில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு பண்டல்கள் வெளிமாநிலத்திற்கு அனுப்புவதற்காக பதுக்கி வைத்திருந்தனர்.

இவைகள் பட்டாசு இருப்பு வைப்பதற்கான லைசென்ஸ் இல்லாத குடோன்களாகும். அந்த குடோன்களையும் போலீசார் சீல் வைத்தனர். மொத்தம் 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். பட்டாசு பதுக்கி வைத்திருந்த குடோன்களை டி.ஜ.ஜி., பாலசுப்பிரமணியம் பார்வையிட்டார். குடோன் உரிமையாளர்கள், பட்டாசு உரிமையாளர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

டி.ஐ.ஜி., நிருபர்களிடம் கூறுகையில், ""அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இரண்டு நாட்கள் இங்கு தங்கி நானே கிராமங்களில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளேன். அனுமதியின்றி பட்டாசு தயாரிப்போர் மீது நடவடிக்கை எடுக்காத சிவகாசி டவுன் இன்ஸ்பெக்டர் கர்ணன் கன்ட்ரோல் ரூமிற்கு மாற்றப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.