மதுரை மேயரின் கணவர் கட்சியில் இருந்து நீĨ

Started by aruljothi, Jul 24, 2009, 01:31 PM

Previous topic - Next topic

aruljothi

மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர் கோபிநாதன், தி.மு.க.,விலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மதுரை மாநகர் மாவட்டம், ஐந்தாவது பகுதி செயலர் கோபிநாதன் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல் பட்டு வருவதாக அறிவதால், தி.மு.க., உறுப்பினர் பொறுப்பு உட்பட கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அன்பழகன் அறிவித்துள்ளார்.


கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள கோபிநாதன், மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியின் கணவர். மத்திய அமைச்சர் அழகிரியின் வேண்டுகோளின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரது பெயரைச் சொல்லி கட்சியினர் பலரும், கட்சிக்கு தொடர்பில்லாத பலரும் கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் உள் ளிட்ட சட்ட விரோதச் செயல் களில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. அதுபோல செயல்படும் கட்சியினர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க அழகிரி முடிவு செய்துள் ளார். எனவே, இன்னும் பலர் மீது நடவடிக்கை பாயும் எனக் கூறப்படுகிறது.


நடவடிக்கையின் பின்னணி: மதுரை பெருங்குடியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். கே.கே., நகரில், "ஜி.டி.எம்., பையர் கிளப்' என்ற பெயரில் மல்டி லெவல் மார்க்கெட்டிங் நடத்துகிறார். வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் என்ற இவரது விளம் பரத்தை நம்பி, ஆயிரக்கணக் கானோர் உறுப்பினராகச் சேர்ந்தனர். தங்களுக்கு விருப்பமான திட் டங்களில் பலர் 38,000 ரூபாய், 7,500 ரூபாய், 2,500 ரூபாய், 1,500 ரூபாய், 1,000 ரூபாய் செலுத்தி உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். உதாரணமாக 38,000 ரூபாய் திட்டத்தின் கீழ், முதலில் முழுத் தொகையை செலுத்த வேண்டும். உடனே, 28,000 ரூபாயை மூன்று தவணைகளாக எடுத்துக் கொள் ளும் வகையில் "செக்' கொடுப்பர். அடுத்த ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் புதிய உறுப்பினர்களை சேர்த்தால், தொகைக்கு ஏற்ப கமிஷனும் கிடைக்கும். இதுதவிர, வாரம் 5,000 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். இந்த கவர்ச்சி திட்டங்களை நம்பி பொதுமக்கள் பையர் கிளப் பில் லட்சக்கணக்கில் முதலீடு செய் தனர். சொன்னபடி வாரம் 5,000 ரூபாய் சிலருக்கு கிடைத்தது.


இதையறிந்த தி.மு.க.,வினர் சிலரும் உறுப்பினராகச் சேர்ந்தனர். இவர்கள் மூலம், இத்தொழிலில் பல லட்சம் ரூபாய் புரள் கிறது என்பதை அறிந்த தி.மு.க., பிரமுகரும், சில லட்சங்களை மாமூலாக தர வேண்டுமென மிரட்டி வசூலித்துள்ளனர். இதனால், பாலசுப்ரமணியத்தால் வாடிக்கையாளர்களுக்கு சரிவர பணம் தர முடியவில்லை. வாடிக்கையாளர்கள் நெருக்க ஆரம்பித்ததால், தி.மு.க., பிரமுகர் பணம் கறந்த விஷயத்தை அவர்களிடம் பாலசுப்ரமணியம் விளக்கினார். இவருக்கு ஆதரவாக முதல் வரின் தனிப்பிரிவுக்கு வாடிக்கையாளர்கள் பலர் புகார் மனு அனுப்பினர். அதில், "ஆளுங் கட்சி மற்றும் மத்தியமைச்சர் அழகிரி பெயரை பயன்படுத்தி மிரட்டி மாமூல் வசூலிக்கின்றனர். அடியாட்கள் சிலரை கிளப் உறுப்பினராக்கி தொடர்ந்து பிரச்னை செய்கின்றனர். இதனால், நாங்கள் நிம்மதியாக வர்த் தகத்தில் ஈடுபட முடியவில்லை.