மழையால் வெள்ள அபாயம்:

Started by aruljothi, Jul 16, 2009, 11:49 AM

Previous topic - Next topic

aruljothi

வால்பாறை: ""வால்பாறையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவேண்டும்'' என கோவை கலெக்டர் உமாநாத் எச்சரிக்கை செய்தார் வால்பாறையில் பத்துநாட்களாக இடைவிடாமல் கன மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று காலை கோவை கலெக்டர் உமாநாத் நேரில் பார்வையிட்டார்.


இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:வால்பாறையில் ஆற்றோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லவேண்டும். நிலச்சரிவு அபாயம் ஏற்படும் பகுதியில் வசிக்கும் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும். வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ஆறு மழைக்கு பின்னர் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். குப்பைகளை ஆற்றில் கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண் டும். குடியிருப்புக்களுக்கு ஆபத்தாக உள்ள மரங்கள் கண்டறியப்பட்டு அவை வெட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.எந்த நேரத்திலும் வீட்டிற்குள் வெள்ளம் புகும் என்ற அபாயம் இருப்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வால்பாறையில் உள்ள அனைத்துபள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கபட்டுள்ளது.


மழையின் பாதுகாப்பு கருதி வெளியேறும் மக்களுக்கு தங்க பாதுகாப்பான இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழையினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு விரைவில் தடுப்புசுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ளத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க அனைத்து துறை அதிகாரிகளும் முழுவீச்சில் பணியாற்றவேண்டும். குறிப்பாக நகராட்சி, போலீஸ், தீயணைப்புத்துறையினர் தீவிரமாக செயல்படுவார்கள்இவ்வாறு கலெக்டர் உமாநாத் கூறினார். பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அன்பழகன், தாசில்தார் சுந்தரபாண்டியன், வால்பாறை டி.எஸ்.பி., மாடசாமி உடனிருந்தனர்.