அத்திக்கடவு... இனிமேல் கனவு...!

Started by aruljothi, Jul 16, 2009, 11:49 AM

Previous topic - Next topic

aruljothi

சோமனூர்: இரண்டாவது பில்லூர்-அத்திக்கடவு குடிநீர் திட்டம், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த உள் ளாட்சிகளுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள் ளது. கோவை மாநகராட்சிக்கு மட்டுமான திட்டம் என, தற் போது நடந்து வரும் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித் துள்ள நிலையில், தங்கள் பகுதிக்கு இந்த திட்டம் கானல் நீர் தானா என உள்ளாட்சி அமைப் புகள் கவலை தெரிவிக் கின்றன.கோவை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை, சிறுவாணி மற்றும் பில்லூர் - அத்திக்கடவு திட்டங்கள் பூர்த்தி செய்கின்றன.


இந்த திட்டம் துவங்கப்பட்டு, பல ஆண்டுகள் ஆன நிலையில், அதிகரித்துள்ள மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை. இதனால், இரண்டாவது பில்லூர் - அத்திக்கடவு குடிநீர் திட்டம் திட்டமிடப்பட்டது. இதற்கான ஆயத்த பணிகள், இரு ஆண்டுகளாக மேற் கொள் ளப்பட்டு வருகிறது. குடிநீர் தேவை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அரசு 190 கோடி ரூபாய் மதிப் பில் இரண் டாவது குடிநீர் திட்டத்தை வகுத்தது.கோவை மாநகராட்சி தவிர்த்து, பல்லடம் நகராட்சி, 23 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சிகளில் 523 குடியிருப்பு பகுதிகளில் இத்திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.


இப்பகுதிகளில் தற் போது, 217.81 லட்சம் லிட்டர் குடிநீர் தினமும் வினியோகமாகிறது. ஆனால், தற்போது குடிநீர் தேவை 271.18 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.மேலும், இதன் மூலம் பயன் பெறும் பகுதிகளின் எண்ணிக் கையும் அதிகரித்துள்ளது. வர்த்தக மற்றும் தொழிற்சாலை இணைப்புகளுக்கு தினசரி 99.28 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. இது, தற்போது 291 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது.அத்திக்கடவு திட்டம் மூலம் தற்போது தினமும் 590.3 லட்சம் லிட்டர் குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. இந்த அளவை தினசரி 1,250 லட்சம் லிட்டராக அதிகரிக்கும் வகையில், இரண்டாவது குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நூறு ஊராட்சிகளும், 23 பேரூராட்சிகளும், 8 ஊராட்சி ஒன்றியங்களும் பயன் பெறும்.


இந்த பகுதிகளுக்கு இரண் டாவது குடிநீர் திட்டம் செயல் படுத்த வேண்டும் என, உள் ளாட்சி அமைப்பினர் உள் ளாட்சி துறை அமைச்சரை கடந்த டிசம்பர் மாதம் சந்தித்து வலியுறுத்தினர். கோவை மாவட்டத்துக்கு அமைச்சர் ஸ்டாலின் வந்த போது, இரண்டு முறை அவரிடம் இது குறித்து வலியுறுத்தப்பட்டது.இந்நிலையில் இத்திட்டத் தில், கோவை மாநகராட்சி சார்பில், ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்பு திட்டத் தில் 113.74 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் துவங்கி நடத்தி வருகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட மாவட்ட கலெக்டர் மற்றும் குடிநீர் திட்ட அதிகாரிகள், அடுத்தாண்டில் இத்திட் டம் செயல்பாட்டுக்கு வரும் எனத் தெரிவித்துள்ளனர்.


இந்த திட்டம் முழுமையாக, மாநகராட்சிக்கு மட்டுமே பயன்படும் வகையில் திட்டமிட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாநகராட்சிக்கு மட்டுமே இந்த திட்டம் எனவும் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் 190 கோடி ரூபாய் மதிப்பில் மற்ற உள் ளாட்சி அமைப்புகளுக்கு, குடிநீர் வழங்க வகுக்கப்பட்ட இரண்டாவது குடிநீர் திட்டம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது, இந்த திட்டத்தில் பயன்பெறவுள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மத்தியில் பெரும் குழப்பத்தையும், திட்டம் வெறும் ஏட்டளவில் தானா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.