சேது சமுத்திர மாற்று பாதை ஆய்வை விரைந்து 

Started by aruljothi, Jul 15, 2009, 11:00 AM

Previous topic - Next topic

aruljothi

ராமநாதபுரம்: சேது சமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் கொண்டு செல்வதற்கான ஆய்வை விரைவில் முடிக்குமாறு ஆய்வு குழுவினருக்கு மத்திய அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 2007ல் 2,400 கோடி ரூபாய் மதிப்பில் சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. கப்பல் போக்குரவத்தை மேம்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இத்திட்டம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியது.  "இத்திட்டத்தால் ராமர் பாலம் சேதமடைவதாக' எழுந்த சர்ச்சையை தொடர்ந்து , சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் "யார் மனதையும் புண்படுத்தாமல்' மாற்று பாதையில் அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஆர்வம் காட்டியது. பாக்ஜலசந்தி-மன்னார் வளைகுடாவை இணைக்கும் வழித்தடத்தை தேர்வு செய்ய நடந்த ஆய்வில் தனுஷ்கோடி ஏற்றதாக கருதப்பட்டது. இது குறித்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக ஆய்வு பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
அதற்கான ஆய்வுகள் ரகசியமாக நடந்து வரும் நிலையில், விரைவில் ஆய்வுகளை முடித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு அதிகாரிகளிடத்தில் வலியுறுத்தி உள்ளது.  அதன் மூலம் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற முனைப்பு காட்டி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.