கற்பனை உள்ளவர்கள் தேர்வு செய்யும் படிப்ப

Started by aruljothi, Jul 13, 2009, 12:35 PM

Previous topic - Next topic

aruljothi

மதுரை: ""கற்பனை சக்தி உள்ளவர்களின் சரியான தேர்வு, அனிமேஷன் பட்டப்படிப்பு,'' என, அனிமேஷன் துறை நிபுணர் மணிகண்ட பூபதி தெரிவித்தார். மதுரை அருப்புக்கோட்டை ரோட்டிலுள்ள, சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லூரி, நடத்திய அனிமேஷன் வழிகாட்டி நிகழ்ச்சி, பழனியப்பன் சந்திரிகா திருமண மகாலில் நேற்று நடந்தது.

இதில் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது; அசையக்கூடிய படங்களை உருவாக்குவதுதான் அனிமேஷன் துறை. "டிவி' நிகழ்ச்சி, விளம்பரங்கள், மொபைல் போன் கேம்ஸ் என, அனிமேஷன் நம் வாழ்க்கையின் அங்கமாக இடம்பெற்றுவிட்டது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க துவக்கப்பட்டதுதான் அனிமேஷன் பட்டப்படிப்பு. 2012ம் ஆண்டில் 5,500 கோடி ரூபாய் கொண்ட மிகப்பெரிய துறையாக வளரப்போகிறது. 2011ம் ஆண்டில் 3.5 லட்சம் பேர் இத்துறைக்கு தேவைப்படுவார்கள். ஹாலிவுட், பாலிவுட் படங்களுக்கான வேலைகளும் அவுட்சோர்சிங் பணிகளும் சென்னைக்கு வருவதால், இத்துறையில் படிக்கும் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. அமெரிக்காவின் வால்ட் டிஸ்னி நிறுவனமும் இங்கு அவுட்சோர்சிங் பணிகளை வழங்கி வருகிறது. மாணவர் விரும்பினால் வெளிநாட்டுக்கும் சென்றும் வேலை பார்க்கும் வாய்ப்பை இந்த அனிமேஷன் துறை வழங்குகிறது.

இன்றைய சூழலில், சாப்ட்வேர் துறையைப் போல் பொருளாதார பின்னடைவை சந்திக்காத துறை இது. மூன்றாண்டு படித்து முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு, முதல் இரண்டு ஆண்டுகளில் 10-15 ஆயிரம் ரூபாயும், இரண்டு முதல் நான்காண்டு பணிபுரிபவர்களுக்கு 20-50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கக்கூடிய துறை இது.இத்துறைக்கு வர விரும்புவோர், வரைகலை, பெயின்டிங்கில் ஆர்வமுள்ளவராக இருக்க வேண்டும். கற்பனை சக்தியும் கற்றுக் கொள்ளும் திறன் கொண்டவர்களுக்கு இத்துறை சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கிறது. இவ்வாறு மணிகண்ட பூபதி தெரிவித்தார். கல்லூரி முதல்வர் சீனிவாசன் பேசியதாவது, "" அனிமேஷன் துறைக்கு தேவைப்படும் நல்ல உள்கட்டமைப்பு வசதி இங்கு செய்யப் பட்டுள்ளது. பல்கலைக்கழக அங்கீகாரம் பெற்ற படிப்பு என்பதால் மாணவர்கள் உலகின் எந்த மூலைக்குச் சென்றும் பணிபுரிய முடியும்,'' என்றார். நிகழ்ச்சியை பேராசிரியர் டாக்டர் கண்ணன் தொகுத்து வழங்கினார்.