இன்ப, துன்பத்தை சமமாக கருதி வாழ்ந்தால்

Started by aruljothi, Jul 13, 2009, 12:32 PM

Previous topic - Next topic

aruljothi

சென்னை:இன்பத்தையும், துன்பத்தையும் சமமாக கருதி, வெள்ளை உள்ளத்தோடு வாழ்ந்தால் வாழ்க்கை செம்மையாகும்,'' என ஜே.எம்.ஆரூண் எம்.பி., இல்ல திருமண வரவேற்பு விழாவில் முதல்வர்கருணாநிதி பேசினார். தமிழக ஹஜ் கமிட்டி தலைவரும், தேனி எம்.பி.,யுமான ஜே.எம்.ஆரூண் மகன் ஹசன் மவுலானா- ஷாஜிதா பர்வீன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடந்தது. விழாவில் பங்கேற்றுதமிழக முதல்வர் கருணாநிதி, மணமக்களை வாழ்த்தி பேசியதாவது:


ஆரூணிடம் நெருங்கிப் பழகினால் தெளிவான அன்பும், பாசமும், எவ்வித கிலேசமும் இல்லாத நட்புறவும் புரியும். தெளிந்த நீரோடை போல வாழ்பவர். உடல்நிலை, வேலைபளுவுக்கு இடையில் எப்படியும் வந்தாக வேண்டும் என்று குடும்பத்தோடு வந்திருக்கிறேன். குடும்பத்தில் ஒருவரது மகிழ்ச்சியில் பங்கேற்கும் உணர்வோடு வந்துள்ளேன்.இன்ப, துன்பங்களை ஒன்றாகக் கருதி, துன்பம் வந்தாலும் சிரித்து மகிழ்ந்து, இன்பம் வந்தாலும் அதிகமாக சிரிக்காமல், இரண்டையும் சமமாக பாவித்து வாழ்க்கை நடத்த வேண்டும்.


வெள்ளை உள்ளத்தோடு மணமக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்த வேண்டும். அத்தகைய வெள்ளை உள்ளம் தான் வாழ்க்கையை செம்மையாக்கும். அத்தகைய வாழ்க்கையை மணமக்கள் வாழ வேண்டும்.இவ்வாறு முதல்வர்கருணாநிதி பேசினார்.