லஞ்ச குடிநீர்வாரிய இன்ஜினியர் கைது: ஜன்னī

Started by aruljothi, Jul 10, 2009, 12:38 PM

Previous topic - Next topic

aruljothi

சென்னை: வீட்டிற்கு குடிநீர் மற்றும் கழிவு நீர் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய இன்ஜினியர், கமர்சியல் இன்ஸ்பெக்டர், அலுவலக புரோக்கர் கைது செய்யப்பட்டனர். லஞ்சப் பணம் 38 ஆயிரம் ரூபாய், ஜன்னல் வழியாக தூக்கி எறியப்பட்டது.

சென்னை கோடம்பாக்கம் சர்க்குலர் சாலையை சேர்ந்தவர் பிரபல குமார். பூர்வீக சொத்தில் இவரது தாய்க்கு பங்கு வந்தது. நான்கு பாகங்களாக அந்த சொத்து பிரிக்கப்பட்டது. அதில், பிரபுவுக்கு சொந்தமான வீட்டிற்கு குடிநீர், கழிவு நீர் இணைப்புப் பெற முயன்றார். கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி குடிநீர் மற்றும் கழிவு நீர் அலுவலகத்திற்குச் சென்றார். ஜூனியர் இன்ஜினியர் ரஞ்சன் (42) என்பவரை அணுகினார். கமர்சியல் இன்ஸ்பெக்டர் பன்னீர் (42) என்பவரை சந்திக்குமாறு அவர் கூறினார். குடிநீர், கழிவு நீர் இணைப்பு கொடுக்க வேண்டிய வீட்டை நேரில் பன்னீர் ஆய்வு செய்தார். வீடு அமைந்துள்ள ரோட்டைத் தோண்டி பணிகள் செய்யவிருப்பதால், 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., முரளியிடம் பிரபலகுமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர்கள் சங்கர், வெற்றிச்செழியன், பாலசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. ரசாயன கலவை தடவப்பட்ட லஞ்சப் பணத்தை வாங்கிய கமர்சியல் இன்ஸ்பெக்டர் பன்னீர் (45), இன்ஜினியர் ரஞ்சன் (42), அலுவலகத்தில் புரோக்கராக செயல்பட்ட ராமமூர்த்தி (42) ஆகியோரை கைது செய்தனர். கோடம்பாக்கம் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நுழைந்த தகவல், பிற அலுவலர்களுக்கு எட்டியது. லஞ்சப் பணத்தை வைத்திருந்த அலுவலர்கள் ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். தூக்கி எறியப்பட்ட 500 ரூபாய் நோட்டுகளாக இருந்த 38 ஆயிரம் ரூபாயை விஜிலென்ஸ் போலீசார் சேகரித்தனர். ஐகோர்ட் வளாகத்தில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் மூவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் அலுவலகத்தில் உள்ள லஞ்ச அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, விஜிலென்ஸ் போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர்.