பயங்கரவாதிகளின் இலக்கில் சென்னை: தேசிய பĬ

Started by aruljothi, Jul 10, 2009, 12:37 PM

Previous topic - Next topic

aruljothi

சென்னை: தேசிய அளவில் பயங்கரவாதிகளின் இலக்காக பிரபல நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. சென்னை தேசிய பாதுகாப்புப் படையின் கர்னல் சர்மா, ஓட்டல்களில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி அறிவுரைகளை வழங்கியுள்ளார்.


சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய ஆலோசனைக் கூட்டம் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் ரவி, இணை கமிஷனர்கள் ரவிக்குமார், சேஷசாயி மற்றும் நட்சத்திர ஓட்டல் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நட்சத்திர ஓட்டல்களுக்கு உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். போலீஸ் துறையில் உள்ளது போல வெடிகுண்டை கண்டறியும் கருவிகள் மற்றும் மோப்ப நாய் படை பிரிவு அமைக்க வலியுறுத்தப்பட்டது. ஓட்டலுக்குள் வந்து செல்லும் வாகனங்களின் எண்கள், ஓட்டலுக்கு வெளியே நின்று செல்லும் ஆட்டோ உட்பட வாகனங்களின் எண்களைப் பட்டியலிட்டு பாதுகாப்பது அவசியம் என அறிவுறுத்தப்பட்டது.


இது பற்றி போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியதாவது: நட்சத்திர ஓட்டல் நிர்வாகத்தினர், அவர்கள் வருமானத்தின் 1 சதவீதத்தை, பாதுகாப்பு விஷயத்திற்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஓட்டலின் கட்டுமானம், ரகசிய அறைகள், ஓட்டலுக்குள் செல்கிற மின்சாரம், குடிநீர், கேபிள் "டிவி' கேபிள்களின் விவரத்தை விவரமாக குறிப்பிட்டு போலீசாருக்கு அளிக்க வேண்டும். இந்த விவரங்கள் இருந்தால் தான் பயங்கரவாதிகள் ஓட்டலில் ஊடுருவினால், பாதுகாப்புப் படையினர் எளிதாக ஓட்டலுக்குள் சென்று அவர்களை வேட்டையாட முடியும். இவ்வாறு ராஜேந்திரன் பேசினார். சென்னையில் உள்ள தேசிய பாதுகாப்புப் படையின் (என்.எஸ்.ஜி.,) லெப்டினன்ட் கர்னல் ஆர்.கே.சர்மா பேசியதாவது: மும்பை தாஜ் ஓட்டலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து, ஓட்டல் ஊழியர்களை சிறை பிடித்தனர். பயங்கரவாதிகளை வேட்டையாடும் ஆபரேஷனில் ஈடுபட்ட கமாண்டோ வீரர்களுள் நானும் ஒருவன். பழங்காலத்து கட்டடமான தாஜ் ஓட்டலின் வரைபடம் (புளூ பிரின்ட்) எங்கள் கைக்கு கிடைக்க பல மணி நேரம் ஆனது. ஓட்டல் அறைகளுக்குச் செல்லும் முக்கிய வழிகள், ரகசிய வழிகள் போன்ற விவரங்கள் அதில் இல்லை. இதனால் தான், ஓட்டல் அறைகளில் பதுங்கிய பயங்கரவாதிகளை வேட்டையாடுவதில் காலதாமதமும், எங்கள் தரப்பில் உயிர்ச் சேதமும் ஏற்பட்டது.


இதைத் தவிர்க்க சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் நிர்வாகிகள், ஓட்டலின் அமைப்பைப் பற்றிய முழு விவரத்தையும் "சிடி' யில் பதிவு செய்து போலீசாரிடம் அளிக்க வேண்டும். மும்பை தாஜ் ஓட்டலில் பதுங்கிய பயங்கரவாதிகள், "டிவி'யில் எங்களின் செயல்பாடுகளை பார்த்துக்கொண்டே, எங்களை நோக்கி எதிர் தாக்குதலை நடத்தினர். அது போன்ற சமயத்தில் ஓட்டலுக்குள் செல்லும் முக்கிய கேபிள் "டிவி' ஒயரை துண்டிக்கும் வசதி இருக்க வேண்டும். ஓட்டலுக்குள் செல்லும் டெலிபோன், கேபிள் "டிவி', குடிநீர் இணைப்புகள் பற்றிய முழு விவரத்தை குறிப்பிட்டால், ஆபத்து காலத்தில் எளிதாகச் செயல்படலாம். இவ்வாறு சர்மா பேசினார்.