News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

இப்போ போனஸ்; அடுத்து "பைபை'

Started by aruljothi, Jul 07, 2009, 12:02 PM

Previous topic - Next topic

aruljothi

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம், டில்லியில் உள்ள அக்பர் ரோடில் உள்ளது. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றதை அடுத்து, இவர்களுக்கு தீபாவளி கொண்டாட்டம் தான். ஆம், அலுவலக ஊழியர்கள் எல்லாருக்கும், மூன்று மாதம் சம்பளத்தை போனசாக தர ராகுல் உத்தரவிட்டார். கையில் பணத்தை வாங்கியதும் எல்லாருக்கும் ஏக குஷி.இப்படி ஒரு கட்சி வெற்றிக் காக, அலுவலக ஊழியர்களுக்கு போனஸ் தந்திருப்பது, காங்கிரசை பொறுத்தவரை இது தான் முதன் முறை. இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்தவர் வேறு யாருமல்ல, கட்சியின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமான ராகுல் தான்.ஆனால், அந்த குஷிக்கு இப்போது அடி விழுந்துள்ளது. கட்சியில் மட்டுமல்ல, கட்சி சார்பான அலுவலகங்கள், நேரு, இந்திரா, ராஜிவ் தொடர்பான அறக்கட்டளைகள், அமைப்புகளில் 60 வயதை தாண்டியவர்களுக்கு ஒரு கடிதம் போயுள்ளது. பணியில் இருந்து விடுவித்துக் கொள்ளும்படி அதில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த அலுவலகங்களில் இப்போது கணக்கெடுப்பு நடந்து வருகிறது. இதனால், வயதான ஊழியர்கள், தங்களுக்கு பென்ஷனாவது சில காலம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்."அட... ராகுலின் கள பணி அபாரம்' என்கின்றனர் காங்கிரசார்!