கோப்பை வென்றது இந்தியா

Started by aruljothi, Jul 06, 2009, 04:15 PM

Previous topic - Next topic

aruljothi

செயின்ட் லூசியா : இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய நான்காவது ஒரு நாள் போட்டி மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையை கைப்பற்றியது.


வெஸ்ட் இண்டீஸ் சென்ற இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென் றது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் அசத்திய இந்திய அணி, தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. தொடரின் வெற்றியாளரை நிர்ணயிக்கும் நான் காவது போட்டி நேற்று செயின்ட் லூசியாவில் நடந்தது. மழை காரணமாக 49 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி, பீல்டிங் தேர்வு செய்தார்.


மிரட்டிய மழை: வெஸ்ட் இண்டீசுக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. இஷாந்த் வீசிய முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் கெய்ல் "டக்' அவுட்டானார். இதற்கு பின் மோர்ட்டன், சர்வான் இணைந்து நிதானமாக ஆடினர். மீண்டும் மழை குறுக்கிட, போட்டி நிறுத்தப்பட்டது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 7.3 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 27 ரன்கள் எடுத்திருந்தது. மோர்ட்டன்(12), சர்வான் (12) அவுட்டாகாமல் இருந்தனர். தொடர்ந்து மழை பெய்ய, போட்டி ரத்து செய்யப்பட்டது.வெஸ்ட் இண்டீசுக்கு மழை வினையாக அமைய, இந்திய அணி தொடரை கைப்பற்றியது. தொடர் நாயகன் விருதை தோனி தட்டிச் சென்றார்.


தொடரும் வெற்றிநடை: கடந்த 2002ல் கங்குலி தலைமையிலான இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. தற்போது தோனியின் அணி இரண்டாவது முறையாக தொடரை கைப்பற்றி சாதித்துள்ளது. தவிர ஒருநாள் போட்டிகளில் தோனி தலைமையிலான அணியின் வெற்றிநடை தொடர்கிறது. கடந்த ஆண்டு இலங்கை, இங்கிலாந்துக்கு எதிரான தொடர்களை வென்றது. இந்த ஆண்டு இலங்கை, நியூசி லாந்துக்கு எதிரான தொடர்களை கைப்பற்றியது. தற்போது வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்தி, தொடர்ந்து 5வது ஒரு நாள் தொடரை வென்றுள்ளது.