எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர விரும்பாத மாணவ&

Started by aruljothi, Jul 06, 2009, 12:29 PM

Previous topic - Next topic

aruljothi

விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களில் மருத்துவ இடம் கிடைக்கும் வாய்ப்புள்ள நான்கு மாணவர்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் கலந்து கொண்டனர்.

இவர்களில் மூன்று பேர், இன்ஜினியரிங் படிப்பில் தாங்கள் விரும்பிய துறை கிடைக்காததால், எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேருவதாக கூறிச் சென்றனர். மருத்துவ சேர்க்கை தர வரிசையில் முதல் இடம் பெற்ற அக்னீஸ்வர், பொறியியல் படிப்பில் சேர விரும்பினார். இது குறித்து அவரது தந்தை ஜெயபிரகாஷ் கூறும் போது, ""அக்னீஸ்வர், நீச்சலில் தேசிய அளவிலான வீரர். இவர், எம்.பி.பி.எஸ்., படித்தால், நீச்சலுக்கு முக்கியத்துவம் கொடுக்க இயலாது. எனவே, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை தேர்ந்தெடுக்க விரும்பினார். ""டில்லியில், அடுத்து நடக்கவிருக்கும் காமன் வெல்த் போட்டி சார்பாக, பயிற்சிக்காக ஜெர்மனி சென்றுள்ளதால், இன்ஜினியரிங் படிப்பிற்கான உத்தரவை நான் பெற்றுக் கொண்டேன்,'' என்றார்.