பயிற்சி டாக்டர்கள் உதவித் தொகை அதிகரிப்

Started by aruljothi, Jul 04, 2009, 09:48 PM

Previous topic - Next topic

aruljothi

சென்னை: போராட்டம் நடத்தி வரும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்கள், சிறப்பு முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களின் (பயிற்சி டாக்டர்கள்) உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால், இது போதாது என்று அறிவித்துள்ள பயிற்சி டாக்டர்கள் வேலை நிறுத்தத்தை தொடரப் போவதாக அறிவித்துள்ளனர் .


இது தொடர்பாக அரசு இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் : மருத்துவப் பட்டப்படிப்பு பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை ரூ. 4,500லிருந்து ரூ.6000 ஆகவும், அரசு பணிசாரா மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் முதலாண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகையான ரூ.8,000 இனி ரூ.12,000 ஆகவும், 2ம் ஆண்டு மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.8,500லிருந்து ரூ.13,000 ஆகவும், 3ம் ஆண்டு மாணவர்களுக்கு இது ரூ.9000லிருந்து ரூ.14,000 ஆகவும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதே போல சிறப்பு மருத்துவர் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கும் முதலாண்டில் ரூ.9500லிருந்து ரூ.15,000 ஆகவும், 2ம் ஆண்டில் ரூ.10,000லிருந்து ரூ.16,000 ஆகவும், 3ம் ஆண்டில் ரூ.10,000லிருந்து ரூ.17,000 ஆகவும், 4, 5 ஆம் ஆண்டுகளில் நரம்பியல் அறுவை மருத்துவ பட்டமேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு ரூ.10,000லிருந்து 4ம் ஆண்டில் ரூ.15,000 ஆகவும், 5ம் ஆண்டில் ரூ.16,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த உதவித் தொகை ஆண்டுதோறும் ரூ. 300 உயர்த்தப்படும். அதே போல சிறப்பு முதுநிலை பட்ட மேற்படிப்பு மாணவர்களின் உதவித் தொகையும் ஆண்டுதோறும் ரூ. 600 உயர்த்தப்படும். இந்த உதவித் தொகை உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 9.6 கோடி கூடுதலாக செலவாகும் என கூறப்பட்டுள்ளது.


மருத்துவ மாணவர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து தமிழக சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், உதவித் தொகையை மேலும் உயர்த்தி தர வேண்டும் என கோரி பயிற்சி டாக்டர்கள் ஸ்டிக்கை தொடர்வதாக அறிவித்துள்ளனர்.