இலங்கை தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை: '

Started by aruljothi, Jul 02, 2009, 02:44 PM

Previous topic - Next topic

aruljothi

சென்னை: ""சிங்களர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்வதாக நம் செயல்கள் அமைந்துவிடக் கூடாது. அவர்களுக்கு கோபம் அதிகரித்தால், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கச் செய்யும். எதிலும், ஒரு நீக்கு போக்கு வேண்டும். அதை மறந்து செயல்பட்டால், அங்குள்ள தமிழர்களுக்கு கேடு ஏற்படும்'' என்று சட்டசபையில் முதல்வர் கருணாநிதி பேசினார்.


இலங்கைத் தமிழர்களுக்கு வாழ்வுரிமையை ஏற்படுத்தித் தருவதோடு, அத்தியாவசியத் தேவையான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்குவது குறித்து, சட்டசபையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு, பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது: அரசியல் பிரச்னைகளை அடிப்படையாக வைத்து, இந்த தீர்மானத்தை அணுகவில்லை. தமிழக சட்டசபையில் தமிழர்கள் என்ற முறையில் இப்போது ஒன்றாகக் கூடி இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசியுள்ளோம். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.


சிலர், தீர்மானத்தில் இருந்து சற்று விலகி தனி ஈழம் குறித்தும் பேசினர். இலங்கைத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மாநில சுயாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மணி தெரிவித்தார். கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதே கருத்தை தான் கொண்டிருந்தன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம், தமிழ் ஈழம் வேண்டும் என பேசியிருக்கிறார். இங்கே நடப்பது, இலங்கை அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையேயான வாக்குவாதம் அல்ல; இனப் போராட்டம். அங்கே, சிங்கள இனம்; இங்கே தமிழ் இனம் என்ற போராட்டம் தான் இது. மாநில சுயாட்சி தான் அங்கு தேவைப்படுகிறது. இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை, தமிழ் மொழிக்கு சம தகுதி, அதிகாரப் பகிர்வு ஆகியவை தான் தற்போதைய தேவையாக இருக்கிறது.


இலங்கையில் தமிழக மக்களை மதிக்கும் அரசு அமைய வேண்டும். சிங்களர்கள், தமிழர்கள் இருவரையும் சமமாக பாவிக்கும் அரசு அமைய வேண்டும். அமெரிக்க மண்ணில் வெள்ளையர்கள் ஆதிக்கம் மட்டுமே இருந்த காலம் போய், இன்று "கறுப்புத் தோல்' அந்நாட்டை ஆள்கிறது. அந்நாடு என்ன சொல்கிறது என்பதை, உலகமே உற்று நோக்குகிறது. அங்கு ஏற்பட்ட மாற்றத்தைப் போல் இலங்கையிலும் மாற்றம் வரும். தமிழர்கள் எல்லாம் சேர்ந்து தமிழர் அரசாக அமைத்தால், நம்மைவிட மகிழ்ச்சி அடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. அங்கு தமிழர் அரசு அமையும்; அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில், நமது கருத்துக்களையும், எண்ணங்களையும், செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ள வேண்டும்.


இதுபோன்ற சூழ்நிலையில், அங்குள்ள சிங்களர்கள், புத்த மதத்தைச் சேர்ந்த பவுத்தர்கள் கூட நம் மீது கோபாக்கினியை வீசக் கூடியவர்கள் தான். சிங்களர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்வதாக நம் செயல்கள் அமைந்துவிடக் கூடாது. அவர்களுக்கு கோபம் அதிகரித்தால், அது அங்குள்ள தமிழர்களை பாதிக்கச் செய்யும். எதிலும், ஒரு நீக்கு போக்கு வேண்டும். அதை மறந்து செயல்பட்டால், அங்குள்ள தமிழர்களுக்கு கேடு ஏற்படும். சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி, அது வேறு விதமான விளைவுகளை உண்டாக்கினால், அது நல்லதல்ல. மத்திய அரசு இதுவரை கொடுத்த நிவாரணப் பொருட்கள், தமிழக அரசு கொடுத்த நிவாரணப் பொருட்கள் ஆகியவை, பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களிடம் நேரடியாக சென்று சேர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். "வணங்கா மண்' கப்பலில் உள்ள பொருட்களை, இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு பேசி வருகிறது.


தமிழர்களுக்கு என்ன வேண்டும் என்பதை அறிந்து செயல்பட, இலங்கை அமைச்சர் தொண்டைமான் போன்றவர்கள் இரண்டு, மூன்று முறை என்னை சந்தித்துள்ளனர். தொண்டைமானின் மகனும் அங்கு அமைச்சராக உள்ளார். அவரும், நேற்று முன்தினம் என்னை சந்தித்தார். அப்போது, ஒரு குழுவாக வந்து, பாதிக்கப்பட்ட மக்களை சந்தியுங்கள் என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார். மத்திய அரசு அனுமதியுடன் தான் எதையும் செய்ய முடியும் என்று அவரிடம் தெரிவித்தேன். அதே நேரத்தில், உங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ, அதை செய்யுங்கள் என்று தெரிவித்தேன். இதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இவ்வாறு முதல்வர் பேசினார்.