ஓரினச்சேர்க்கை சட்டப்பூர்வமானது : டில்லி

Started by aruljothi, Jul 02, 2009, 02:43 PM

Previous topic - Next topic

aruljothi



புதுடில்லி : ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானது இல்லை என டில்லி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. டில்லி ஐகோர்ட்டில் ஓரினச்சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருதக் கூடாது என மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது . இந்த மனு டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, தலைமையிலான பெஞ்ச் முன்னர் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஓரினச்சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்றும் எனவே அதன் மீது உள்ள கிரிமினல் குற்றம் முத்திரை நீக்கப்படுவதாகவும் , 377 பிரிவு சட்ட ம் திருத்தம் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த பரபரப்பு தீர்ப்பை வரவேற்றுள்ள ஓரினச்சேர்க்கையாளர்கள் டில்லி ஐகோர்ட்டுக்கு வெளியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓரினச்சேர்க்கை கடும் குற்றம் என்றும், இயக்கைக்கு மாறான இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்படும் என்றும் 1860ம் ஆண்டு லார்டு மெக்காலே சட்டம் பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது