ஒரு ரூபாய் அரிசி திட்டத்தால் முதியோர் இறĪ

Started by aruljothi, Jul 02, 2009, 02:14 PM

Previous topic - Next topic

aruljothi

திண்டுக்கல் : தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தால், ஏழை முதியோர் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டப்பலன் குறித்து, சமூக நலத்துறையின் பொருளாதார, அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரிக்கும் மத்தியக்குழு ஆய்வு நடத்தியது. ஆய்வில் இத்திட்டத்தை செயல்படுத்தியதால், கிராமங்களில் ஏழை முதியோர் இறப்பு விகிதம் குறைந்ததும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் கோபப்பட்டு போலீஸ் ஸ்டேஷனிலோ, உள்ளூர் கட்டப்பஞ்சாயத்திலோ புகார் செய்யாததும், அனாதை இல்லங்களை தேடி முதியோர் செல்வது குறைந்ததும், மலை வாழ் பழங்குடியினருக்கு அதிக பலன் கிடைத்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவு அரசுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் விரைவில் மற்ற மாநிலங்களிலும் இத்திட்டம் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளன.