மாநகராட்சி 'லைசென்ஸ்' கட்டணம் பலமடங்கு உய&#

Started by aruljothi, Jun 29, 2009, 01:37 PM

Previous topic - Next topic

aruljothi

மளிகை, டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் மற்றும் தொழிற்கூடங்கள் துவங்க மாநகராட்சியின் "லைசென்ஸ்' கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை நகரில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொழில் கூடங்கள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட கடைகளை நடத்த மாநகராட்சியிடம் "லைசென்ஸ்' பெற வேண்டும்.


இவ்வாறு பெறப்படும் லைசென்ஸ்களுக்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்ணயித்து பெற்றுக் கொள்கிறது. இந்தாண்டு, ஏப்ரல் மாதம் முதல், புதிய கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணத்தை பல மடங்கு மாநகராட்சி உயர்த்தியுள்ளது. இதனால், புதிய கடைகள் மற்றும் தொழிற்கூடங்கள் துவங்க நினைப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மளிகைக் கடை துவங்க முன்பெல் லாம் லைசென்ஸ் பெற கடை எவ்வளவு பெரியதாக இருந்தாலும் 200 ரூபாய் செலுத்தினால் போதும். ஆனால், தற்போது இக்கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் கடையின் அளவைப் பொறுத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, 1000 சதுர அடி வரை அமைக்கப்படும் மளிகை கடைகளுக்கு லைசென்ஸ் பெற 2,000 ரூபாயும், அதற்கு மேல் அதிகமுள்ள கடைகளுக்கு 3,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டீ மற்றும் காபி கடைகளுக்கு முன் 500 ரூபாய் கட்டணமாக இருந்தது. தற்போது லைசென்ஸ் பெற வேண்டுமானால் 500 சதுர அடி வரை 1,000 ரூபாயும், அதற்கு மேல் 2,000 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும். இதில், தையல் கடைகளுக்கான கட்டணம் தான் மிக அதிகமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கு முன், தையல் கடைகள் துவக்கப் பட்டால் லைசென்ஸ் பெற 30 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். ஆனால், தற்போது லைசென்ஸ் பெற 1,000 சதுர அடிவரை உள்ள கடைகளுக்கு 2,000 ரூபாயும், அதற்கு மேல் 5,000 ரூபாயும் செலுத்த வேண்டும். முடி திருத்தும் கடைக்கு முன் 50 ரூபாய் செலுத்தினால் லைசென்ஸ் கிடைக்கும். ஆனால், தற்போது "ஏசி' கடையாக இருந்தால் 10 மடங்கு அதாவது 500 ரூபாயும், "ஏசி' இல்லாத கடைக்கு 200 ரூபாயும் செலுத்தியாக வேண்டும். இது போன்று கட்டண உயர்வினால், புதிதாக தொழில் துவங்குவோர், மத்தியில் தயக்கம் ஏற்பட்டுள்ளது. கடன் பெற்று தொழில் கூடம் துவங்குவோர் லைசென்ஸ் பெற இவ்வளவு செலுத்த வேண்டுமே என புலம்பி வருகின்றனர். இன்னும் பல தொழில் கூடங்கள் மற்றும் வர்த்தக மையங்களுக்கான புதிய லைசென்ஸ் கட்டணங்களும் வசூலிக்கப்படுகின்றன. இன்னும் பல தொழில் கூடங்கள் மற்றும் கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இவ்வாறு உயர்த்தப்படும் போது கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலை உயர்வும் தவிர்க்க முடியாததாகிறது.


உரிமக் கட்டண உயர்வு குறித்து, தமிழ்நாடு மளிகைப் பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் சொரூபன் கூறுகையில்,"" சென்னை மாநகராட்சி வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடைகளுக்கான உரிமக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இது சிறு வர்த்தகர்கள் மற்றும் கடைகள் துவக்க நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த கட்டண உயர்வை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்,'' என்றார்.
எண் கடை/ தொழில் கூடம் பழைய கட்டணம் புதிய கட்டணம்
(ரூபாயில்) ( ரூபாயில்)


1. பால் பொருட்கள் 240 500 முதல் 1500 வரை
2. வெல்ல மண்டி 300 500
3. பேக்கரி 1200 2000 முதல் 3000 வரை
4. மீன் மற்றும் கறிக்கடை 400 1000 முதல் 2000 வரை
5. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் 2400 3000 முதல் 5000 வரை
6. சிகரெட், பீடி கடை 240 500
7. அச்சகம் 240லிருந்து 2000 2000 லிருந்து 5000
8. பவர் லாண்டரி 1000 2000 முதல் 5000
9. இட்லி மாவுக்கடை 240-750 2000-5000
10. பட்டாணிக்கடை 90 500
11. தோல் பொருட்கள் தயாரிப்பு கூடம் 3000 5000
12. வெல்டிங் பட்டறை 150 2000-5000
13. ஆட்டோமொபைல் 1000 2000-5000
14. சைக்கிள் கடை 150 500
15. பேட்டரி சார்ஜிங் கடை 1000 2000-5000