எட்டுமணி நேர மின்தடை: டில்லியில் பெரும் த

Started by aruljothi, Jun 29, 2009, 01:35 PM

Previous topic - Next topic

aruljothi

புதுடில்லி: தலைநகர் டில்லியில் தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் மின்தடை அமல் படுத்தப்படுகிறது. இரவு நேரத்தில், மின்தடை ஏற்பட்டதும் வீட்டை விட்டு தெருக்களில் மக்கள் குவிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

டில்லியில் கடந்த சில நாட்களாக மிக மோசமான அளவுக்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. தெற்கு டில்லியில் சகேத் என்னும் பகுதியிலும், மேற்கு டில்லியில் துவாரகா என்ற பகுதியிலும் மக்கள் இரவு நேரத்தில் தெருக்களில் வந்து புழுக்கத்தில் தவித்தபடி நேரத்தைக் கடத்தும் கொடுமை வழக்கமாகி விட்டது. மின்தட்டுப்பாட்டைக் கண்டித்து, இரவு நேரத்தில் கையில் மெழுகுவர்த்தியை ஏந்தியபடி பாதிக்கப்பட்டவர்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஆர்ப்பாட்ம் செய்கின்றனர். டில்லியில் உள்ள மின்வாரியம் இது குறித்து கருத்து தெரிவிக்காமல், மவுனம் காக்கிறது. மின்வாரியத்துடன் பேசித் தீர்க்க டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறார். மத்திய அரசுடன் பேசி அதிக மின்சாரம் பெறவும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். இன்றுள்ள மோசமான நிலைமை சீரடைய வேண்டுமென்றால், மழை பெய்து நீர்மின் நிலையங்களில் அதிக மின் உற்பத்தி ஏற்பட்டால் தான் விடிவு என்று கூறப்படுகிறது. மழை வேண்டி பிரார்த்தனைகளும் செய்யத்துவங்கி விட்டனர் மக்கள்.