கல்விக்கடன் பாக்கியை கட்ட புது சலுகை : வங்

Started by Kalyan, May 12, 2009, 12:06 PM

Previous topic - Next topic

Kalyan

கல்விக்கடன் பாக்கியை கட்ட புது சலுகை : வங்கிகள் திட்டம்

மேற்படிப்புக்கு வாங்கிய கல்விக் கடன் பாக்கியை கட்ட முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு புது சலுகைகளை அளிக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு வங்கிகளில் கடன் பெற முடியும். இந்தியாவில் படிக்க விரும்புவோருக்கு 10 லட்சம் ரூபாய், வெளிநாடுகளில் படிக்க விரும்புவோருக்கு 20 லட்சம் ரூபாய் வரை கல்விக்கடன் உதவி தரப்படுகிறது.


இந்த கடன் பாக்கியை, ஐந்து முதல் ஏழு ஆண்டுகளுக்குள் கட்டி முடிக்க வேண்டும். கடன் பாக்கி செலுத்துவது, படிப்பை முடித்த ஓராண்டுக்கு பின்னரோ, அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்திலோ ஆரம்பிக்கும். கடன் பாக்கிக்கான வட்டி, வங்கிக்கு வங்கி வேறுபடும். கடந்தாண்டு மேற்படிப்பை முடித்த பல மாணவர்களுக்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை; வேலை கிடைத்த ஆயிரக்கணக்கான பேருக்கு வேலையில் போதுமான சம்பளம் இல்லை; சிலருக்கு வேலையும் போய் விட்டது.

இப்படிப்பட்ட நிலையில், அவர்கள் கடன் பாக்கியை செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். வேலைக்கு போன சிலர், கடன் பாக்கி தவணையை செலுத்தி வந்து, பாதியில் கட்ட முடியாமல் உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, இந்திய வங்கிகள் சங்கம் தீவிர ஆலோசனை செய்தது. நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், கடன் பாக்கியை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை உள்ளதால், அவர்களுக்கு சலுகை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இது தொடர்பாக கூட்டத்தில் இரு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கடன் பாக்கியை செலுத்த மாணவர்களுக்கு அதிக பட்சம் ஓராண்டு வரை அவகாசம் தரப்பட்டு வருகிறது. இந்த அவகாசத்தை இரண்டு ஆண்டாக அதிகரிக்கலாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, கடன் பாக்கியை ஐந்து முதல் ஏழு ஆண்டுக்குள் கட்ட வேண்டும் என்று இருப் பதை ஏழு ஆண்டு முதல் பத்தாண்டு வரை கட்டலாம் என்றும் மாற்றியமைக்கலாம் என்றும் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. அதன் பின் இந்த சலுகைகள் அமலுக்கு வரும்.



source : dinamalar