மே 18க்குப் பின்னரே பிளஸ் டூ தேர்வு முடிவுக&#

Started by rajoe, Apr 29, 2009, 11:47 AM

Previous topic - Next topic

rajoe

மே 18க்குப் பின்னரே பிளஸ் டூ தேர்வு முடிவுகள்?

இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மே 18ம் தேதிக்குப் பின்னரே வெளியாகும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடந்தன. சுமார் 7 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.

இந்தத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விடைத் தாள்கள் திருத்தம் தாமதமானது. ஆசிரியர்கள் விடைத் தாள்களை திருத்தாமல் போராட்டங்களில் ஈடுபட்டதால் அந்தப் பணி இரண்டு வாரம் தாமதமாகவே முடிந்தது.

இப்போது மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடக்கவுள்ளது. இந்தப் பணி அடுத்த 10 நாட்களில் முடிவடைய வாய்ப்பில்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனால் தேர்வு முடிவுகள் 8ம் தேதிக்குப் பதிலாக 11ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால், தமிழகத்தில் 13ம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடப்பதால் அந்தப் பணியில் பள்ளிகளும், ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளதால் தேர்வு முடிவுகளை தேர்தலுக்குப் பின் வெளியிட கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளதால், அதிலும் பள்ளிகளே அதிக அளவில் பயன்படுத்தப்படவுள்ளதால் அதன் பின்னரே பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 முடிவுகள் மே மாதம் 9ம் தேதியே வெளியானது குறிப்பிடத்தக்கது.

source:thatstamil