ஆற்றில் விமானத்தை இறக்கிய துணிச்சல் : முழ&#

Started by OmMuruga, Jan 19, 2009, 07:59 PM

Previous topic - Next topic

OmMuruga

நியூயார்க் : பயணிகள் உயிரிழப்பைத் தடுப்பதற்காகவே விமானத்தை ஆற்றில் இறக்கியதாக துணிச்சல் விமானி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த அடுத்த கட்ட விசாரணைகள் துவங்கின. அமெரிக்க ஜெட் விமானத்தின் மீது பறவைகள் கூட்டமாக மோதியதில், விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் சேதமடைந்தன.


விமானம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் ஹட்சன் ஆற்றில் விழுந்தது. உயிர் சேதம் ஏதும் இல்லாமல் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். விமானியின் சமயோசித முயற்சியால் தான் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. உலகம் முழுவதும் பயணிகளைக் காப்பாற்ற விமானி மேற்கொண்ட முயற்சி பற்றி பேசப்படுகிறது. துணிச்சலான அவரது முடிவு பற்றி தற்போது அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் புலனாய்வு குழு உறுப்பினர் கிட்டி கிக்கின்ஸ் கூறியதாவது:பறவை மோதி விபத்து ஏற்பட்ட பின் அருகில் உள்ள விமான நிலையத்தில் தரை இறக்க முயற்சித்தால் பேராபத்து ஏற்படும் என்று கருதி, ஆற்றில் விமானத்தை இறக்கியதாக விமானி செஸ்லி சுல்லன்பெர்ஜெர் தெரிவித்துள்ளார்.


உயர்ந்த கட்டடங்களை தாண்டி விமான நிலையத்திற்கு விமானத்தை கொண்டு செல்வது கடினம் ஆகையால் மீட்பு பணிக்கு ஏதுவாக விமானம் ஆற்றில் இறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 155 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன், 3,000 அடி உயரத்தில், 400 கி.மீ., வேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது பறவை கூட்டம் மோதியுள்ளது. விமானியின் இந்த முயற்சியை அனைவரும் பாராட்டுகின்றனர். விமானி எங்களிடம், "ஆற்றில் இறக்கி அதன் மூலம் பயணிகளைக் காக்க நினைத்தேன், அதன்படி செயல் பட்டேன்' என்றார்.இவ்வாறு கிட்டி கிக்கின்ஸ் கூறினார். விமானத்தின் கறுப்புப் பெட்டி இனி மேல்தான் சோதனை செய்யப்படும். கறுப்புப்பெட்டி சோதனையில் கடைசி நேர தகவல் பரிமாற்றங்கள் குறித்து தெரியும்.  :acumen