அபின் பயிரை வளர்க்க பாதுகாப்பு தரும் நக்

Started by OmMuruga, Jan 12, 2009, 11:28 PM

Previous topic - Next topic

OmMuruga

புதுடில்லி : நக்சல்கள் தங்கள் சதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட போதிய பணவசதி பெற போதைப் பயிர் ஊக்குவிப்பு மூலம் சேகரிக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது. நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள நக்சல் அமைப்புகள், தங்கு தடையின்றி வளர்ந்து கொண்டிருக்கிறது. இவர்களுக்குத் தேவையான பணம் எங்கிருந்து வருகிறது, யார் இவர்களுக்கு பண உதவி செய்கின்றனர் என்ற கேள்விக்குத் தற்போது விடை கிடைத்துள்ளது.


நக்சல் தாக்குதல் அதிகமுள்ள மாநிலங்களில், சட்டத்திற்குப் புறம்பாக அபின் பயிர்கள் அதிகம் விளைகின்றன. நக்சல்கள் அதிகமுள்ள பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்கள் இதற்கு எடுத்துக்காட்டு. இந்த போதைப் பயிர்களால் தான் நக்சல்களுக்கு வருமானம் கிடைக்கிறது. இவர்கள் நேரடியாக விவசாயம் செய்வதில்லை. கள்ளத்தனமாக விவசாயம் செய்பவர்களுக்கும், விளை நிலங்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கின்றனர். இதற்காக ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொள்கின்றனர். இதன் மூலம் நக்சல்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது. இது பற்றி போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் அதிகாரிகள் கூறுவதாவது: உள்ளாட்சி அமைப்பு பலம் குறைந்து காணப்படும் சில இடங்களில் மட்டும் இது போன்று போதைப் பொருட்கள் பயிரிடப்படுகின்றன.


பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் இது போன்று நடக்கிறது. வடகிழக்குப் பகுதியில் உள்ள சில நக்சல்கள் மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பினர் இந்த வகையில் பணம் பார்க்கின்றனர். போதைப் பொருட்களால் அதிக லாபம் கிடைப்பதால், இந்தப் பகுதிகளில் நக்சல்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்கள் போலீஸ் மற்றும் பிற பாதுகாப்புப் படையினருக்கு எட்டாத தொலைவில் உள்ளனர். இதனால், இவர்களைப் பிடிப்பதற்குச் சிரமமாக உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு மட்டும் நாகலாந்து, ம.பி., மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஆந்திரா, ஆகிய மாநிலங்களில் இருந்து, ஒரு லட்சம் கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.