ஆவின் பால் பண்ணைக்கு 16 கோடி ரூபாய் இழப்பு

Started by sajiv, Dec 16, 2008, 04:11 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை : அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு அண்மையில் பெய்த மழையால்  ரூ.16 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அம்பத்தூர் பால் பண்ணையில் இயந்திரங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் மின்சார டிரான்ஸ்பார்மர் அறைகளில் வெள்ள நீர் புகுந்ததன் காரணமாக பால் பண்ணை முற்றிலும் செயல்படாத நிலை ஏற்பட்டது.

இதற்கு மாற்று ஏற்பாடாக, ஆவின் நிர்வாகம் எடுத்த உடனடி நடவடிக்கையின் காரணமாக   மாதவரம் மற்றும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்து பால் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்து நுகர்வோர்களுக்கு பால் வழங்கியது.
துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அம்பத்தூர் பால் பண்ணை சரி செய்யப்பட்டு நுகர்வோர்களுக்கு பால் விநியோகம் தங்கு தடையின்றி தற்போது நடைபெற்று வருகிறது.

அம்பத்தூர் பால் பண்ணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பால் வளத் துறை அமைச்சர் உ.மதிவாணன் நேரில் சென்று பார்வையிட்டார்.  தொடர்ந்து வரும் காலங்களில் மழை நீர் வெள்ளம் அம்பத்தூர் பால் பண்ணைக்குள் புகாவண்ணம் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விரிவான ஆலோசனைகளை நடத்தினார்.

இந்த பால் பண்ணைக்கு சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் மொத்த இழப்பீடு ரூ.16 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், உடனடி நடவடிக்கைகள் மேற்கொண்டு அம்பத்தூர் பால் பண்ணையை செயல்பட வைத்ததற்காக ஆவின் நிர்வாகத்திற்கு அமைச்சர் தன் பாராட்டுகளை தெரிவித்தார்.