இந்தியாவை சுனாமி தாக்கும்: நிபுணர்கள் எசĮ

Started by dhilipkumar, Dec 14, 2008, 04:16 PM

Previous topic - Next topic

dhilipkumar

இந்தியாவை சுனாமி தாக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2008   ( 12:49 IST )
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் மீண்டும் சுனாமி பேரலைகள் ஏற்படும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில் உள்ள சுமத்ரா தீவின் மேற்குப் பகுதியில் 700 ஆண்டுகளாக ஏற்பட்ட பூகம்பங்கள், பவளப் பாறைகள் மீது அவை விட்டுச் சென்ற சுவடுகள் ஆகியவை குறித்து கலிபோர்னியா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த கெர்ரி சீயெ தலைமையில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் முடிவில் அவர்கள் வெளியிட்ட தகவல் வருமாறு:

மரத்தின் தண்டுப் பகுதி ஆண்டுதோறும் வளர்ச்சி அடைவதைப் போலவே பவளப் பாறைகளும், சுற்றுச் சூழல் மாறுபாட்டின்போது மாற்றமடைகின்றன. பூகம்பம் நிகழும்போதெல்லாம் கடல் மட்டம் உயர்கிறது. பவளப் பாறைகளும் விரிவடைகின்றன.

கடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களும் சுனாமி பேரலைகள் ஏற்படக் காரணமாக அமைந்து விடுகின்றன. அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவை மீண்டும் சுனாமி தாக்கலாம். இதனால் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்படக்கூடும்.