மும்பை தாக்குதல் ஆதாரங்களை கொடுங்கள் : இந&#

Started by OmMuruga, Dec 13, 2008, 10:00 AM

Previous topic - Next topic

OmMuruga

இஸ்லாமாபாத் : "மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் மற்றும் தகவல்களை எங்களுக்கு கொடுங்கள். அப்படி கொடுக்காத வரையில், சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளை தொடர முடியாது' என, இந்தியாவை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முகமது குரேஷி, இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:மும்பை தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை கொடுக்கும்படி இந்தியாவிடம் கேட்டோம். இருந்தும், இதுவரை எந்தத் தகவல்களையும், ஆதாரங்களையும் இந்திய அரசு கொடுக்கவில்லை.


இந்த விஷயத்தில் உறுதியான மற்றும் கொள்கை ரீதியான ஒத்துழைப்பு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவில்லையெனில், தாக்குதல் சம்பவம் தொடர்பான எந்த குற்ற விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. இரு நாடுகளிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமெனில், உறுதியான ஒத்துழைப்பு அவசியம்.மும்பை தாக்குதல் தொடர்பாக கூட்டுக் குழு அமைப்பது மற்றும் கூட்டு விசாரணை நடத்துவது போன்ற யோசனைகளை நாங்கள் தெரிவித்தோம்.


இதற்கும் இந்திய தரப்பில் பதில் இல்லை. மேற்படி, சம்பவம் தொடர்பாக நம்பகமான மற்றும் உறுதியான தகவல்களை இந்திய அரசு கொடுக்கவில்லை என்பதால், நாங்கள் நடத்தும் விசாரணையில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் செல்ல முடியவில்லை. பல முறை வேண்டுகோள் விடுத்தும், இந்திய அரசு எங்களுக்கு எந்தத் தகவல்களையும் தரவில்லை.மும்பை தாக்குதலில், பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.


இது தொடர்பாக எங்கள் அரசு ஏற்கனவே விசாரணை நடத்தி வருகிறது. பாகிஸ்தானே பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், எங்கள் மண்ணை எந்தவிதமான பயங்கரவாதச் செயல்களுக்காகவும் பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இவ்வாறு முகமது குரேஷி கூறினார்.


இதற்கிடையில், "மும்பை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் சில ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. எதிர்காலத்தில் வேறு எந்தத் தாக்குதல்களும் நடக்காமல் தடுக்க, மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அதே நேரத்தில், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என அமெரிக்க வெளியுறவு அமைச்சக தகவல் தொடர்பாளர் சீன் மெக்கர்மாக் கூறினார். :acumen