பாகிஸ்தானுக்கு மீண்டும் அமெரிக்கா எச்சர

Started by sajiv, Dec 12, 2008, 07:56 PM

Previous topic - Next topic

sajiv


வாஷிங்டன் :  பாகிஸ்தான் அரசு, வேகமாக செயல்பட வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.

'இரு நாடுகளுக்கும் இடையே ஆவேசமான, ஆக்ரோஷமான, போர் முழக்க பேச்சுக்கள் இல்லை என்பது ஆறுதலான விஷயம். இருப்பினும் தற்போது நிலைமை அபாய கட்டத்தைத் தாண்டிப் போய் கொண்டுள்ளதாக நான் அறிகிறேன்' என்று
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ், சிஎன்பிசி டிவிக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

2001-02ம் ஆண்டில் நிலவிய மோசமான சூழல் இப்போது இல்லை. அந்த சூழலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே சற்று இணக்கமான சூழல் ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

ஆனால் மும்பைத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு நிலைமை சரியில்லை. மோசமாகியுள்ளது. அபாயகரமானதாகவும் உள்ளது. எனவே பாகிஸ்தான் அரசு சற்று வேகமாக செயல்பட வேண்டியது அவசியம் என கூற விரும்புகிறேன். இதில் பாகிஸ்தான் அரசு மெத்தனமாக இருக்க கூடாது.

எனது இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கமே, இந்திய அரசுக்கும், இந்திய மக்களுக்கும் அமெரிக்காவின் ஆறுதலையும், உறுதியான ஆதரவையும் தெரிவிப்பதே. மும்பை தாக்குதல் சம்பவத்தால் புண்பட்டுள்ள இந்தியாவுக்கு இந்த நேரத்தில் தேவைப்படுவது உறுதியான ஆதரவுதான்.

இந்த கொடிய செயலைச் செய்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று இந்திய மக்கள் உறுதியாக நம்புகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறக் கூடாது என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது சரியான எதிர்பார்ப்புதான்.

இந்தியப் பயணத்தை முடித்து விட்டு நான் பாகிஸ்தானுக்கு சென்றபோது, தீவிரவாதம் தொடர்பாக பாகிஸ்தான் அரசு சரியான பாதையில் போக வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.   இதுதான் செயல்பட வேண்டிய நேரம். பாகிஸ்தான் மண்ணை தீவிரவாதிகள் பயன்படுத்தியிருப்பதால், இதுபோன்ற தாக்குதல் இனிமேல் நேராமல் தடுக்க வேண்டியது பாகிஸ்தான் அரசின் கடமையாகும் என்று அந்த பேட்டியில் காண்டலிசா ரைஸ் குறிப்பிட்டுள்ளார்.