தில்லியில் திருவள்ளுவர் சிலை திறந்து வைத

Started by sajiv, Dec 05, 2008, 06:16 AM

Previous topic - Next topic

sajiv


புதுதில்லி டிச-4. தில்லி தமிழ்ச் சங்கத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவர் சிலையை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

பல ஆண்டுகளாக தில்லி ஆர்.கே.புரத்தில் உள்ள கழிப்பறைகளின் நடுவே இருந்த திருவள்ளுவர் சிலையை, தில்லி தமிழ்ச் சங்கம் எடுத்து, தங்களுடைய வளாகத்தில் நிறுவியது. இதை, முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.

விழாவில் பேசிய முதல்வர் கருணாநிதி, பெங்களூருவில் 20 ஆண்டு காலமாக திருவள்ளுவர் சிலை திறக்கப்படாத அவல நிலை இருந்து வருகிறது. ஷீலா தீட்சித் போன்ற நல்ல முதல்வர்கள் கர்நாடகாவில் வந்தால் தான், அந்த வள்ளுவர் சிலைக்கு ஒரு விமோசனம் பிறக்கும். மேடையில் அமர்ந்திருக்கின்ற உள்துறை அமைச்சர் சிதம்பரம் தான், அந்தச் சிலையை விரைவில் திறக்க முயற்சி எடுக்க வேண்டும்,' என கேட்டுக் கொண்டார்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்ததற்கு மத்திய அரசை பாராட்ட வேண்டும், என்றார். இதற்காக தமிழகத்தைச் சேர்ந்த பல மத்திய அமைச்சர்கள் முயற்சி எடுத்ததையும் அவர் பாராட்டி பேசினார்.

இந்த விழாவில் கருணாநிதிக்கு, 'செம்மொழிச் செம்மல்' என்ற விருதை தில்லி தமிழ்ச் சங்கம் வழங்கியது.