தமிழகம் முழுவதும் கனமழை - சென்னை சாலைகளில

Started by sajiv, Nov 26, 2008, 04:46 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை  சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என்றும், குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை கொட்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, திருவள்ளுர், காஞ்சீபுரம், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நவ-26 அன்று (நாளை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ளநீர் தேங்கியுள்ளது.  மேலும் 12 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

சென்னையில் கனமழை பெய்து வருகிறது.  விடாமல் பெய்து வரும்  தொடர் மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சென்னை சாலைகளில் வெள்ளநீர் தேங்கியிருக்கிறது. மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் முழுவதும் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நவ-26 அன்று (நாளை) விடுமுறை விடப்படுவதாக தமிழக  அரசு அறிவித்துள்ளது.

இந்த தகவலை சென்னை மாவட்ட ஆட்சியர் மைதிலி ராஜேந்திரன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை காரணமாக, பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக இரு மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளன. காவிரி டெல்டா மாவட்டங்களில் பலத்த சூறாவளிக் காற்றுடன் கன மழை கொட்டுகிறது. நாகை துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இன்னும் சில நாட்கள் மழை நீடித்தால் நெற் பயிற்கள் அழுகி விடும் நிலை உள்ளது.

இந்த நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அதற்கேற்ப நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் சூறாவளிக் காற்று வீசி வருகிறது. கன மழையும் வெளுத்து வாங்கி வருகிறது.

கடலூரிலும் சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்து வருவதால் நகரமே முடங்கிப் போயுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் வீசிய சூறாவளிக் காற்றால் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

தஞ்சை நகரில் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்கள் நகராட்சிப் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.


ganeshbala

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் நவ-26 அன்று முதல் நடைபெற இருந்த பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் பெய்து வரும் கனமழை காரணமாக, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நவ-26 அன்று முதல் வரும் 29ம் தேதி வரை நடைபெற இருந்த அனைத்து பல்கலைக்கழக தேர்வுகளும், ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.  இத்தகவலை அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி தெரிவித்துள்ளார்.

மீண்டும் இந்த தேர்வுகள் நடைபெறுவது குறித்ததேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalyan

வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து கொ‌ண்டிரு‌ந்த புய‌ல் '‌நிஷா' நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் இ‌ன்று காலை கரையை கடந்தது எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆரா‌‌ய்‌ச்‌சி ‌நிலைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

வங்க‌க் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று முன்தினம் மாலை 'நிஷா' புயலாக மாறியது. புயல் தமிழக கடற்கரையை நெருங்கியதால் கனமழை பெ‌ய்தது.

நாகப்பட்டிணம் - காரைக்கால் இடையே 50 கிலோ மீட்டர் தொலைவில் 'நிஷா' புயல் மையம் கொண்டு இருந்தது. அது நேற்று கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் புயல் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டு இருந்தது. இன்று காலை 7.30 மணி அளவில் புயல் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் கரையை கடந்தது.

இதனால் தமிழகம், புதுச்சேரியில் பலத்த மழையோ அல்லது மிக கன மழையோ நீடிக்கும். 65 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசும். கரையை கடந்த புயல் மெதுவாக வலு இழந்து வருகிறது என்றாலும் சூறாவளி காற்றுடன் மழை பெ‌ய்யு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ரா‌ய்‌ச்‌சி ‌நிலைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

source : webulagam