டிரேடு சென்டரில் 'கிட் எக்ஸ்-2008'

Started by sajiv, Nov 22, 2008, 06:42 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை சென்னையில்  பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் விளையாட்டு கண்காட்சி "கிட் எக்ஸ்-2008"  நவ-21 அன்று துவங்கியது.  நிகழ்ச்சியை தமிழக ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா பங்கேற்று துவக்கி வைத்தார்.

மூன்று நாள் நடைபெறும் இந்த கண்காட்சியில்,  மாணவர்களை கவரும் வகையில் பல விளையாட்டு சாதனங்களும், அறிவியல் பூர்வமான விளையாட்டு கருவிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.  தொழில் வர்த்தக கூட்டமைப்பு இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

குழந்தைகளுக்கு குறிப்பாக 5 முதல் 12 வயதுவரை உள்ள குழந்தைகளுக்கு சிறப்பங்காடிகள், விளையாட்டு சாதனங்கள், அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த  கணினி விளையாட்டுக்கள் போன்றவைகளை உள்ளடக்கிய 50-க்கும் மேற்பட்ட அங்காடிகள் இதில் இடம்பெற்றுள்ளன.  மாணவர்களின் கல்வித் திறன் மற்றும் பொது அறிவுத் திறனை மேலும் வளர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அறிவுப்பூர்வமாகவும்,  ஆக்கப்பூர்வமாகவும் இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

கண்காட்சியை ஏற்பாடு ஦ச்யதிருந்த நிர்வாகி ஒருவர் இது குறித்து தெரிவிக்கையில்,  மாணவர்கள் நலன் கருதி இந்த கண்காட்சி அகைம்கப்பட்டிருப்பதாகவும். குறிப்பாக பள்ளி மாணவர்களின் அறிவுத் திறனை வளர்க்க இது பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் , மேலம் வெளியூர்களிலிருந்து இந்த கண்காட்சியை காண மாணவர்கள் வருவார்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

சென்னையில் 400-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு மாணவர்கள் நிகழ்ச்சியை  கண்டுகளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன

நவ- 23 அன்று நடைபெறும் நிறைவு விழாவில், உலக செஸ் கோப்பையை வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொள்கிறார்.