வேண்டாம் வீண் பழி, தயாநிதி ராஜினாமா செய்ய 

Started by sajiv, Nov 22, 2008, 06:37 AM

Previous topic - Next topic

sajiv


சென்னை நவ-21.(டிஎன்எஸ்) தயாநிதிமாறனை திமுக-விலிருந்து நீக்கவேண்டும் என்று கருதினால், ராஜினாமா செய்ய அவர் தயாராக இருக்கிறார் என்றும், அதற்காக தங்கள் மீது வீண்பழி சுமத்தவேண்டாம் என்றும் சன் நெட்வொர்க்கின் தலைவர் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு கருணாநிதி, தயாநிதி மற்றும் கலாநிதி மாறன் மீது குற்றம்சாட்டி நவ-20 அன்று வெளியிட்டுள்ள அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் கருணாநிதி கடிதம் ஒன்றை கலாநிதி மாறன் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்களை கலாநிதி மாறன் மறுத்துள்ளார்.  அறிவாலயத்திலிருந்து சன் டிவி அலுவலகம வெளியேறியபோது பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை தாங்கள் விட்டுச் சென்றதாக அவர் கூறியுள்ளார்.  பின்னர் அந்த அலுவலகம் கலைஞர் டிவிக்காக சீரமைக்கும்போது இடிக்கப்பட்டதை தாங்கள் சேதப்படுத்தியதாக கூறியிருப்பதை அவர் மறுத்துள்ளார்.

அலுவலகத்தை காலி செய்யும் போது தாங்கள் அறிவாலயத்தின் மேலாளரிடம் அந்த இடங்களை சுற்றிக் காட்டியதாகவும், அனைத்தும் சரியாக உள்ளது என்று அவர் கையெழுத்திட்டு கொடுத்திருப்பதாகவும் கலாநிதி மாறன் கூறியுள்ளார்.

தங்கள் மீது ஏற்கனவே பலர் பலவிதமான புகார்களை கூறிவந்துள்ளதாகவும், தற்போது கருணாநிதியே வீண்பழி சுமத்தியிருப்பது தங்களை வருத்தமடைய செய்திருப்பதகாவும் அவர் கூறியுள்ளார்.

தயாநிதி மாறன் சிறந்த மத்திய அமைச்சராக செயல்படுவதாக தினகரனில் கருத்து கணிப்பு வெளியிட்ட பிரச்சினை குறித்த கருணாநிதியின் புகாருக்கு பதிலளித்துள்ள கலாநிதி மாறன், ஏற்கனவே தயாநிதிமாறன் சிறப்பாக செயல்படுவதாக பல்வேறு பத்திரிகைகள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளது என்றும், அதனை முரசொலியில் முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்ததையும் அவர் நினைவுபடுத்தினார்.

மின்வெட்டு பிரச்சினை குறித்தும், ஸ்பெக்டரம் முறைகேடு குறித்தும், சன் டிவி, தினகரன் பத்திரிகை மட்டுமின்றி பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வந்துள்ளன என்றும் கலாநிதி மாறன் கூறியுள்ளார். (டிஎன்எஸ்)