பெங்களூரில் இந்தியாவிலேயே உயரமான கட்டடம

Started by sajiv, Nov 21, 2008, 05:42 AM

Previous topic - Next topic

sajiv


பெங்களூரு(டிஎன்எஸ்)  பெங்களூரில் 200 கோடி ரூபாய் செலவில், இந்தியாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டப்படுகிறது. பெங்களூரு சுதந்திரப் பூங்காவில், 560 மீட்டர் உயர கட்டடம் கட்டப்பட உள்ளது. அரசின் ஒப்புதலுக்காக, இத்திட்டம் காத்திருக்கிறது.

பெங்களூரின் ப்ருஹட் பெங்களூரு மகாநகர பாலிகே, 200 கோடி ரூபாய் செலவில் இத்திட்டத்தை நிறைவேற்ற உள்ளது. கட்டி, நிர்வகித்து, ஒப்படைக்கும் திட்டத்தின் அடிப்படையில், இது கட்டப்பட உள்ளது. பழைய மத்திய சிறையில், சுதந்திரப் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, இங்கு தான், இந்த பிரமாண்ட கட்டடம் கட்டப்பட முன்பும் திட்டமிடப்பட்டது..

பின்னர், உத்தரஹள்ளி ஹுப்ளிக்கு மாற்றப்பட்டது. ஆனால், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு மீண்டும் பழைய இடத்துக்கே இது மாற்றப்பட்டுவிட்டது. இந்த கட்டடம், 553 மீட்டர் டொரான்டோ டவர் கட்டடத்தை விட, உயரமாக 1,848 அடி உயரத்துக்கு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இது அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.  (டிஎன்எஸ்)