News:

MyKidsDiary.in :: Capture your kids magical moment and create your Online Private Diary for your kids

Main Menu

கனவு பலிக்குமா?

Started by dhilipkumar, Nov 15, 2008, 10:02 PM

Previous topic - Next topic

dhilipkumar

இந்தியா மற்றும் இலங்கையின் ஒலிம்பிக் வெற்றிக் கனவுகள் மெய்ப்படுவது சாத்தியமா என்பது குறித்த பெட்டகத் தொடர்.

எந்த ஒரு விளையாட்டு வீரருக்கும் ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டுமென்பதுதான் மிகப் பெரிய கனவாக இருக்கும்.

ஒலிம்பிக்கில் ஒருவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும்போது அவரது நாட்டின் தேசிய கீதம் அரங்கில் ஒலிக்கப்படும். உலக வரைபடத்தில் சின்ன மழைத்துளியாகத் தெரியும் தேசங்களின் கீதங்களெல்லாம் ஒலிம்பிக் அரங்கத்தில் ஒலித்துள்ளன.

ஆனால் 100 கோடிக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் இந்தியா மற்றும் அண்டை நாடான இலங்கை ஆகியவற்றுக்கு இந்த சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவே கிடைத்துள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா விளையாட்டுத் துறையில் அதிலும் குறிப்பாக ஒலிம்பிக்கில் பிரகாசிக்க முடியாதிருப்பது தொடர்பாக சிவராமகிருஷ்ணன் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத் தொடர் நிகழ்ச்சியினை நேயர்கள் கேட்கலாம்.

விளையாட்டுத்துறையில் சீனாவின் வியத்தகு முன்னேற்றம்

20 ஆண்டுகள் முன்னர் வரையில், இந்தியா இலங்கை போலவே, விளையாட்டுத் துறையில் முத்திரை பதிக்காது இருந்துவந்தது சீனா.

1980களின் இறுதி வரை ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பெரிதாக வெற்றிகளை கண்டிறாத சீனா, அதன் பிறகு அதிக அளவிலான போட்டிகளில் வெல்லத் துவங்கியுள்ளது.

இந்த முறை பீஜீங்கில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் சீனா முதல் இடத்தை பிடிக்கும் என்று கூட சிலர் கணித்துள்ளனர்.

இருபது ஆண்டுகளில் சீன கண்டுள்ள அபார வளர்சியின் காரணங்களை ஆராயும் சிவராமகிருஷ்ணனின் பெட்டக நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.