இந்தியாவில் நோக்கியா என் 85

Started by sajiv, Nov 11, 2008, 03:04 PM

Previous topic - Next topic

sajiv


இந்தியாவில் நோக்கியா என் 85:

பரபரப்பாகப் பேசப்பட்ட நோக்கியா என் 85 மொபைல் அண்மையில் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டது. இரண்டு வகை ஸ்லைடருடன் 2.6 அங்குல அகல திரையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆட்டோமேடிம் ஸ்க்ரீன் திருப்பும் வசதி தரப்பட்டுள்ளது. 2.5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா, எப்.எம். ட்ரான்ஸ்மீட்டர், 15 கேம்ஸ் ஆகியன தரப்பட்டுள்ளன. நான்கு பேண்ட் அலைவரிசைகளில்  இயங்கக் கூடிய இந்த மொபைல் GSM/GPRS/EDGE  ஆகிய நெட்வொர்க்குகளில் இயங்கும்.

மியூசிக் இயக்கத்திற்கென தனியே கீகள் தரப்பட்டுள்ளன. இதன் இந்திய விலை ரூ.27,299.இதன் இயங்கு திறனை மற்றவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கையில் நோக்கியாவின் என் 96 மொபைலைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். என் 96 விலை ரூ. 34,000 என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஆனால் மெமரியில் என் 85 குறைவான அளவிலேயே உள்ளது. 78 எம் பி உள் நினைவகம் தரப்பட்டுள்ளது.

8 ஜிபி வரையிலான மெமரி கார்டினை இது ஏற்றுக் கொள்கிறது. 16 மிமீ தடிமனில் 128 கிராம் எடையில் இது அமைக்கப்பட்டுள்ளது.  1200 mAh   திறனுடன் கூடிய பேட்டரி இருப்பதால் அதிக நேரம் பேசலாம். 5 மணி நேரம் பிரவுசிங் மேற்கொள்ளலாம். 7 மணி நேரம் வீடியோ காணலாம். வீடியோ ரெகார்டிங் 2.54 மணி நேரம் மற்றும் 30 மணி ஆடியோ கேட்கலாம். டி.வி. அவுட்புட் தரப்பட்டுள்ளது.

கால் வெயிட்டிங், கால் ஹோல்ட் மற்றும் கால் டைவர்ட் வசதிகளுடன் கால் டைமர் வசதியும் தரப்பட்டுள்ளது. ஸ்பீட், வாய்ஸ் மற்றும் பிக்ஸெட் டயலிங் வசதி கொண்டுள்ளது. ஆறு பேர் வரைகான்பரன்ஸ் மேற்கொள்ளலாம். புஷ் டு டாக் கிடைக்கிறது. பின் பக்கத்தில் 5 மெகா பிக்ஸெல் கேமரா 20 எக்ஸ் ஸூம் வசதியுடன் உள்ளது. 3 மீட்டர் தொலைவு இயங்கும் பிளாஷ் ஆன், ஆப், ஆட்டோமேடிக் மற்றும் ரெட் ஐ ரிடக்ஷனுடன் உள்ளது. முன் பக்க கேமரா இதில் பாதியளவு திறன் கொண்டதாக உள்ளது. வாய்ஸ் கமாண்ட், வாய்ஸ் டயலிங், வாய்ஸ் ரெகார்டர் மற்றும் டெக்ஸ்ட் டு ஸ்பீச் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் அனைத்து வகையான நோக்கியா சாப்ட்வேர் தொகுப்புகளும் பதிந்து தரப்படுகின்றன. கையடக்கத்தில் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு சிறு கம்ப்யூட்டராகவும் நல்ல ஸ்டில் மற்றும் வீடியோ கேமராகவும் இது இயங்குகிறது என்றால் அது மிகையாகாது.