அதிபர் புஷ்சுடன் ஒபாமா சந்திப்பு

Started by sajiv, Nov 11, 2008, 02:49 PM

Previous topic - Next topic

sajiv


வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா , அமெரிக்க அ‌திபர் புஷ்ஷை வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ளார். அதிபர் புஷ் விடுத்த அழைப்பின் பேரில் ஒபாமாவும் அவரது மனைவியும் வெள்ளை மாளிகைக்கு வந்தனர். வெள்ளை மாளிகை வந்தடைந்த ஒபாமாவையும் அவரது மனைவி மிச்சல் ஒபாமாவையும், அதிபர் புஷ் உற்சாகமாக வரவேற்றார். புஷ்சும் - ஒபாமாவும் நிகழ்த்திய முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.ஒபாமா மற்றும் புஷ்ஷின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை செய்திதொடர்பு செயலர், டானா பெரினோ கூறிய‌தாவது : அதிபர் புஷ், ஒபாமாவுடன் நிகழ்த்திய பேச்சுவார்த்தை முழுவதும் வெளியிடப்படாது.

ஒரு சில தகவல்கள் மற்றுமே வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.புஷ்சும் , ஒபாமாவும் ஓவல் அலவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். சுமார் 2 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சர்வதேச அச்சுறுதலாக இருக்கும் பொருளாதார சிக்கல் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் புஷ், தங்கள் சந்திப்பு நட்பு நிமித்தம் நடைபெற்றதாக தெரிவித்தார். புதிய அதிபராக பொறுப்பேற்கும் ஒபாமாவுக்கு ஆதரவு அளிக்க இருப்பதாக தெரிவித்தார். தங்கள் சந்திப்பின் போது வெள்ளை மாளிகையை ஒபாமாவுக்கு சுற்றி காட்டியுள்ளார் அதிபர் புஷ், மேலும் ஒபாமாவின் குழந்தைகளுக்கான பிரத்யேக அறையையும் காட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் இருந்து கிளம்பும் போது ஒபாமா, அதிபர் புஷ்சுக்கும் அவரது மனைவி லாரா புஷ்சுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

ஒபாமா ஜனவரி 20ம் தேதி அதிபராக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.