சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ முடிவு

Started by dhilipkumar, Nov 11, 2008, 02:24 PM

Previous topic - Next topic

dhilipkumar

சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ முடிவு



சந்திரயான் வெற்றியைத் தொடர்ந்து சூரியனுக்கும் விண்கலம் அனுப்பி ஆராய்ச்சி மேற்கொள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்துள்ளது.

இந்திய விண்வெளித்துறையின் வரலாற்றுச் சாதனையாக கடந்த 22ஆம் தேதி சந்திரயான் - 1 என்ற விண்கலம் நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டது.

தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் திட்டம்மிட்டபடி வலம் வந்து கொண்டிருக்கும் சந்திரயான், நிலவின் மேல்பரப்பை துல்லியமாக ஆராயும். நிலவில் கனிமங்கள், நீர் இருப்பு மற்றும் ஹீலியம் தொடர்பான ஆய்வுகளை அது மேற்கொள்ளும்.

சந்திரயான் - 1 விணகலத்தை வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பிய உற்சாகத்தில் உள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், சூரியனுக்கும் விண்கலம் அனுப்பத் தீர்மானித்துள்ளனர்.

இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் பெங்களூரில் கூறியதாவது:

சந்திரயான் 1 வெற்றி எங்களுக்கு மேலும் நம்பிக்கையை தந்துள்ளது. நிலவுக்கு அப்பாலும் ஆராய்ச்சியைத் தொடர வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது.

நிலவுப் பயணத்தைத் தொடர்ந்து சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்யவும் இஸ்ரோ தீர்மானித்துள்ளது. இதற்காக 'ஆதித்யா' என்ற பெயரில் திட்டம் செயல் வடிவம் கொடுக்கப்படும். சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்வது என்பது மிகவும் கடினமானது. சவாலானது.

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் கிராமப்புற வளர்ச்சி, விண்வெளி ஆராய்ச்சிக்காக செயற்கைக்கோள் ஒன்றை இஸ்ரோ தயாரிக்கும்.

இவ்வாறு மாதவன் நாயர் தெரிவித்தார்.

------ தொடர்ச்சியாக மாறும் பல செய்தி ஆதாரங்களை தேடி உலாவவும்-----
                                         ITACUMENS