தேர்வை தள்ளி வைத்ததால் மாணவிகள் போராட்டம

Started by VelMurugan, Oct 24, 2008, 10:43 AM

Previous topic - Next topic

VelMurugan

பெண்கள் கல்லூரியில் மழை நீர் : தேர்வை தள்ளி வைத்ததால் மாணவிகள் போராட்டம்

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு பெண்கள் கல்லூரி வளாகத்தில் தேங்கி நின்ற மழை நீரால் தேர்வு நாள் தள்ளிவைக்கப்பட்டதால் மாணவிகள் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டத் தில் பெய்து வரும் மழையால் ராமநாதபுரம் அரசு பெண்கள் கலை கல்லூரி வளாகத்தில் மழை நீர்தேங்கி உள்ளது. மாணவிகளால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பல்கலை., தேர்வு நடந்து வரும் நிலையில் மழை நீரால் கடந்த இரண்டு நாட்களாக கல்லூரிக்கு விடுமுறையும் விடப்பட்டது. நேற்றும் மழை நீர் அகற்றப்படாமல் இருந்ததால் கல்லூரி வந்த மாணவிகள் வெளி வாசலிலேயே நின்று கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து மாணவிகள் கல்லூரி வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். இதன் பின் நகராட்சியிலிருந்து இரண்டு லாரிகள் வரவழைக்கப்பட்டு கல்லூரியில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தப்பட்டது. மாணவிகளும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.


கல்லூரி மாணவிகள் கூறுகையில், "தற்போது கம்ப்யூட்டர் செய்முறை பயிற்சி தேர்வு நடந்து வரும் நிலையில் மழையால் கடந்த இரண்டு நாட்களாக தள்ளிவைக்கப்பட்ட தேர்வு இன்று(நேற்று) காலை 8 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நாங்கள் 8 மணிக்கு வந்த போது கல்லூரி உள்ளே செல்ல முடியாதப்படி தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இன்றும் தேர்வு இல்லை என்றனர். தேர்வு எழுத முடியாமல் தினமும் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்' என்றனர்.