கல்லூரியே கொண்டாடிய சமத்துவ தீபாவளி

Started by VelMurugan, Oct 24, 2008, 10:40 AM

Previous topic - Next topic

VelMurugan

கல்லூரியே கொண்டாடிய சமத்துவ தீபாவளி



சேலம்: சேலம் ஏ.வி.எஸ்., கல்லூரியில் பள்ளி குழந்தைகளுக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்புக்கு புத்தாடை, இனிப்பு கொடுத்து, சமத்துவ தீபாவளி கொண்டாடப்பட்டது. ஏ.வி.எஸ்., கல்லூரி மாணவர்களின் அமைப்பான சிறுதுளி மூலம் ரூ.ஒரு லட்சம் சேமிக்கப்பட்டிருந்தது. அதில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அம்மாபேட்டை இந்திராகாந்தி மகளிர் மேனிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு புத்தாடை, இனிப்பு, நோட்டு புத்தகங்கள் ஏற்கனவே வழங்கப்பட்டன.


நேற்று ஏ.வி.எஸ்., கல்லூரி அருகிலுள்ள சின்ன கவுண்டாபுரம் தொடக்க பள்ளி, ராமலிங்கபுரம் நடுநிலைப்பள்ளியில் படிக்கும் 260 மாணவ, மாணவியருக்கு ரூ. 50 ஆயிரம் மதிப்பில் இலவமாக புத்தாடை, இனிப்பு, நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு பின், பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ பேராயர் டாக்டர் சிங்கராயன், முஸ்லிம் பிரமுகர் முகமது இப்ராஹிம், சைவ சித்தாந்த சொற்பொழிவாளர் பூதலிங்கம் மற்றும் கல்லூரி நிர்வாகிகள் ஒன்றிணைந்து, மத்தாப்பு கொளுத்தி, மாணவ, மாணவியருக்கு தீபாவளி வாழ்த்து கூறினர். தொடர்ந்து கல்லூரியில் படிக்கும் பிற மாநிலங்கள், பிற நாட்டு மாணவ, மாணவியர் வரிசையாக நின்று அவரவர் தாய்மொழியில் தீபாவளி வாழ்த்துகளை அனைவருக்கும் தெரிவித்தனர்.


தீபாவளி தொடங்கியது போல, பத்தாயிரம் வெடி பற்றவைத்து வெடிக்கப்பட்டது. அதன்பின் மாணவ, மாணவியர் அனைவரும் ஆளுக்கொரு பக்கமாகவும், கூடி நின்றும் பட்டாசுகளை வெடிக்க துவங்கினர். எல்லாமே சரவெடிகள். இரண்டு மணி நேரம் தொடர்ந்து பட்டாசு வெடிக்கப்பட்டது. விழாவில், ஏ.வி.எஸ். கல்லூரி நிறுவனங்களின் செயலாளர் ராஜவினாயகம், ஏ.வி.எஸ்., இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் ஸ்ரீசக்தி கைலாஷ் கல்வி நிறுவனங்களின் தாளாளர் செந்தில்குமார், ஏ.வி.எஸ்., கல்லூரி முதல்வர் முருகேசன், துணை முதல்வர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.


* கல்லூரி வளாகத்துக்குள் தொடர் பட்டாசு வெடிக்கப்பட்டதால், சுற்றுப்புற மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பட்டாசு லாரி தீப்பற்றி வெடிப்பதாக தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத் துறையினர் பதறிப்போய், இரண்டு வண்டிகளுடன் கல்லூரியை நோக்கி புறப்பட்டு விட்டனர். போலீஸார் மைக்கில் தகவல் பறக்க சம்பவ இடத்துக்கு விரைய துவங்கினர். கல்லூரியில் தீபாவளி கொண்டாடப்படுவதாக தகவல் தெரிந்த பின்னரே போலீஸார் நிம்மதியடைந்தனர்.