1400 பேரை ஆட்குறைப்பு செய்ய யாகூ நிறுவனம் முட

Started by Sudhakar, Oct 24, 2008, 01:36 AM

Previous topic - Next topic

Sudhakar

சென்னை: பிரபல யாகூ இன்டர்நெட் நிறுவனம் 1400 பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் லாபம் கணிசமாகக் குறைந்துள்ளதை அடுத்த மூன்று மாதங்களில் 10 சதவீத பணியாளர்களை ஆட்குறைப்பு செய்ய யாகூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. உலக அளவில் யாகூ நிறுவனத்தில் 14 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் யாகூ நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டில் இதே காலத்தில் 151 மில்லியன் டாலர் லாபம் கிடைத்தது. தற்போது இதே கால கட்டத்திற்கான லாபம் 54 மில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் வருவாய் ஒரு சதவீதம் அளவுக்கே உயர்ந்துள்ளது. கூகுள், மைஸ்பேஸ், பேஸ்புக் போன்ற இன்ட்நெட் நிறுவனங்களின் போட்டி, பொருளாதார மந்தநிலை ஆகியவை காரணமாக யாகூ நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.

எனவே செலவைக் குறைக்கும் வகையில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 400 மில்லியன் டாலர் அளவுக்கு செலவு தொகையக் குறைக்க முடியும் என்று யாகூ நிறுவனம் கருதுகிறது.