News:

Choose a design and let our professionals help you build a successful website   - ITAcumens

Main Menu

'காவலர் குடியிருப்பு'.. ஒரு நிஜ சினிமா!

Started by rajoe, Nov 10, 2009, 04:05 PM

Previous topic - Next topic

rajoe

[smg id=7031 type=full]

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே பல பிரச்சினைகள் இருந்தாலும், 2 மாநிலங்களையும் இணைப்பது சினிமா மட்டும்தான். 2 மாநில மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது சினிமாதான், என்றார் இயக்குநர் அமீர்.

1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பெங்களூரில் நடந்த பெரிய கலவரத்தை மையமாக வைத்து போலீஸ் குவார்ட்டர்ஸ் எனும் படத்தில் கன்னடத்தில் இயக்குகிறார் ஏஎம்ஆர் ரமேஷ். இந்தப் படம்தான் தமிழில் காவலர் குடியிருப்பு என்ற பெயரில் வெளியாகிறது.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. இயக்குநர் அமீர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டார்.

விழாவில் அவர் பேசியது:

"தமிழ்நாட்டில் நடந்த சம்பவங்களை படமாக்க இங்கே யாரும் முன்வராத நிலையில், கர்நாடகத்தை சேர்ந்த ஏ.எம்.ஆர்.ரமேஷ்தான் அதை வைத்து சயனைடு (குப்பி) என்ற படத்தைத் தந்தார்.

இப்போது பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து, 'காவலர் குடியிருப்பு' படத்தை இயக்கி இருக்கிறார். உண்மை சம்பவங்களை படமாக்க ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறார்கள். அதில், ஏ.எம்.ஆர்.ரமேசும் ஒருவர்.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும், 2 மாநிலங்களையும் இணைப்பது சினிமா மட்டும்தான். 2 மாநில மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பது சினிமாதான்...", என்றார் அமீர்.

பின்னர் பேசிய படத்தின் இயக்குநர் ஏஎம்ஆர் ரமேஷ், "நாட்டில் நடக்கும் கலவரங்கள் பல குடும்பங்களை சிதைத்துவிடுகின்றன. பல உயிர்களை பலிகொண்டுள்ளன. பலரை சிறைக்கு அனுப்பியிருக்கின்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, இவை அத்தனையும் பெங்களூரில் நடந்தது. இந்த கலவரத்தில் ஒருவர் 17 வருடங்களாக காணாமல் போனார். நிஜ சம்பவம் நிகழ்ந்த காவலர் குடியிருப்பிலேயே ஒரு மாதம் தங்கி படப்பிடிப்பு நடத்தினோம். நிஜ சம்பவங்களை பார்த்த பொதுமக்கள், அதை சினிமாவாகப் படமாக்கியபோது, கலவர காட்சிகளை கண்ணீருடன் பார்த்தார்கள்..." என்றார்.