அனிமேஷன் படமாக எடுக்கப்பட்டு வந்த ரஜினிகாந்த் தின் சுல்தானை முழு நீள ரஜினி படமாக மாற்றியுள்ளனராம். இதனால் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாம்.
செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ஆக்கர் ஸ்டுடியோஸ் மூலமாக தயாரித்து வரும் அனி்மேஷன் படம் சுல்தான். இப்படத்தை முழு நீள அனிமேஷன் படமாக எடுத்து வந்தார் செளந்தர்யா.
ஆனால் படம் முடிவடைவதாக தெரியவில்லை. இடையில் பல சிரமங்கள். இந்த நிலையில் தற்போது இப்படத்தை முழுமையான ரஜினி படமாக எடுக்கவுள்ளார் செளந்தர்யா. இன்னொரு விஷயம், படத்தை முழுமையாக ரஜினிகாந்த்தே டேக் ஓவர் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் இப்படம் முழுமையான ரஜினி படமாக மாறுகிறது. அதாவது அனிமேஷன் படமாக இது இருக்காது. மாறாக வழக்கமான, பிரமாண்டமான ரஜினி படமாக இது இருக்கும். படத்தின் இடை இடையே அனிமேஷன் காட்சிகள் வருவது போல மாற்றவுள்ளனராம்.
மேலும் படத்தின் பட்ஜெட்டும் பல கோடிகள் கூடியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரஜினிகாந்த்தின் மிகப் பிரமாண்டமான படங்களில் ஒன்றாக சுல்தான் மாறவுள்ளது.
எந்திரன் தொடர்பான வேலைகள் முழுமையாக முடிந்த பின்னர் சுல்தானுக்கு முழு வீச்சில் நேரம் கொடுக்கவுள்ளாராம் ரஜினி.