News:

GinGly.com - Used by 85,000 Members - SMS Backed up 7,35,000 - Contacts Stored  28,850 !!

Main Menu
Menu

Show posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.

Show posts Menu

Messages - rajoe

#101
Chat Box / Re: தின பலன்
Jun 14, 2010, 10:34 AM
மேஷம் - லாபம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் - நட்பு

கடகம் - கவனம்

சிம்மம் - வெற்றி

கன்னி - போட்டி

துலாம் - வரவு

விருச்சிகம் - துன்பம்

தனுசு - தெளிவு

மகரம் - சிக்கல்

கும்பம் - நலம்

மீனம் - ஆர்வம்
#102

ஜூன், 14, 1982

பாக்லாந்து போர் முடிவடைந்தது. இங்கிலாந்துப் படையிடம், அர்ஜென்டினா வீரர்கள் சரணடைந்தனர்.
#103
இன்று ஒரு குறள்
காமக் கடன்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல்.

விளக்கம்:
காமமாகிய நோயும் கடலைப் போல பெருகியுள்ளது. அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடன் இல்லாமல் போயினர்.
#104
[smg id=7491 type=full]
#105
தாவரங்களுக்கும் உயிர் இருப்பதை கண்டறிந்தவர்?

ஜகதீஷ் சந்திர போஸ்
#106
ஜூன் 12, 1812

இந்த தினத்தில் தான் ரஷ்யாவுக்குள் தனது படைகளை ஊடுருவச் செய்தார் நெப்போலியன்
#107
Chat Box / Re: தின பலன்
Jun 12, 2010, 01:17 PM
மேஷம் - முயற்சி

ரிஷபம் - மகிழ்ச்சி

மிதுனம் - புகழ்

கடகம் - தடை

சிம்மம் - வளர்ச்சி

கன்னி - ஜெயம்

துலாம் - உறுதி

விருச்சிகம் - அன்பு

தனுசு - தனம்

மகரம் - வரவு

கும்பம் - அமைதி

மீனம் - அன்பு
#108
இன்று ஒரு குறள்
காமணிம் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து.

விளக்கம்:

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு காமணிம் நாணணிம் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே.
#109
வாஷிங்டனுக்கு முன்பு அமெரிக்க தலைநகராக இது இருந்தது?

பிலடெல்பியா
#110
Chat Box / Re: தின பலன்
Jun 11, 2010, 10:37 AM
மேஷம் - நற்செயல்

ரிஷபம் - பக்தி

மிதுனம் - அனுகூலம்

கடகம் - வரவு

சிம்மம் - சிக்கல்

கன்னி - சாதனை

துலாம் - அமைதி

விருச்சிகம் - ஊக்கம்

தனுசு - ஆதரவு

மகரம் - ஓய்வு

கும்பம் - தனம்

மீனம் - பாராட்டு
#111
இன்று ஒரு குறள்
சுரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்.

விளக்கம்:

காமநோயை ணிழுவதும் மூடி மறைக்கவும் ணிடியவில்லை, நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்மைக்கு நாணம் தருகின்றதே.
#112
Chat Box / Re: தின பலன்
Jun 09, 2010, 11:12 AM
மேஷம் - வெற்றி

ரிஷபம் - தனம்

மிதுனம் - மேன்மை

கடகம் - நலம்

சிம்மம் - ஓய்வு

கன்னி - நன்மை

துலாம் - கவனம்

விருச்சிகம் - துன்பம்

தனுசு- மறதி

மகரம்- உற்சாகம்

கும்பம் - நிம்மதி

மீனம் - அமைதி
#113
இன்று ஒரு குறள்
மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.

விளக்கம்:
பிரிவுத்துன்பமான இந்த நோயை பிறர் அறியாதபடி மறைப்பேன். ஆனால் அஃது ஊற்று நீரைப் போல மென்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.
#114
[smg id=7486]

சென்னை : தீவுத்திடல் செயற்கை தாஜ்மகாலில் நடந்த கவியரங்கை மாறு வேடத்தில் வந்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னை தீவுத்திடலில் ஒரு செயற்கை தாஜ்மகால் உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிஞர் வைரமுத்து தலைமையில் அந்த தாஜ்மகாலில் ஒரு காதல் கவியரங்கம் சமீபத்தில் நடந்தது. தமிழக அரசின் சுற்றுலாத் துறைதான் அதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

தாஜ்மகால் மேடையில் கவிஞர் வைரமுத்து அமர்ந்திருக்க, காதல் கவியரங்கம் தொடங்கியது.

இந்த நிகழ்வுக்கு கூட்டம் நிரம்பி வழிந்தது. பெரும்பாலும் இளைஞர்கள். அதில் ஒரே ஒரு முதியவர் மட்டும் வித்தியாசமாக தெரிந்தார். தள்ளாத வயது, நரைத்த தலை, கூரிய பார்வை. கவியரங்கத்தின் மீதே கண்ணும் காதும் வைத்து லயித்து இருந்தார்.

வைரமுத்துவின் கவிதை வரிகள் மழையாய் விழுந்தன. வரிக்கு வரி கூட்டம் கைத்தட்ட, அந்த வயதான முதியவர் மட்டும் அடிக்கடி தலையாட்டினார். தாடியை தடவியடி சிரித்துக்கொண்டார்.

"இதுதான் காதலுக்கு சிந்தப்பட்ட உயரமான கண்ணீர்த்துளி" என்ற வரியையும், "கண்மணியை உள்ளே புதைத்துவிட்டு வெள்ளை விழி மட்டும் வெளியே தெரிகிறது" என்ற வரியையும் ஆரவாரத்தோடு சபை ரசித்தபோது, அவரும் ரசித்தார்.

"யமுனையை விட கூவம் தாஜ்மகாலே கொடுத்து வைத்தது...
யமுனை வற்றிவிடும்...கூவம் வற்றாது"

-என்று வைரமுத்து கவிதை சொன்னபோது எழுந்த சிரிப்பின் அலைகளில், முதியவரும் மிதந்தார்.

கவியரங்கம் முடிந்தது. தடியை ஊன்றிக்கொண்டே முதியவர் கூட்டத்தில் கரைந்து காணாமல் போய்விட்டார்.

அந்த முதியவர் வேறு யாருமல்ல. 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த்!!

நேரடியாக வந்தால் பரபரப்பு ஏற்படும் என்பதால், ரஜினிகாந்த் மாறுவேடத்தில் மின்னலாய் வந்து ரசித்துவிட்டுப் போனார்.

யாரும் அவரை அடையாளம் காண முடியவில்லை. அவரை அறிந்துகொண்டவர் ஒரே ஒரு அதிகாரி மட்டுமே.. அவரும் காட்டிக் கொடுக்கவில்லை!

ரஜினி மாறுவேடத்தில் வருவது இது முதல்முறையல்ல.. சென்னையில் சில குறிப்பிட்ட படங்களை மாறுவேடத்தில் போய் மக்களோடு மக்களாக அமர்ந்தே அவர் பார்த்திருக்கிறார். எம்எல்ஏ ஹாஸ்டல், சேப்பாக்கம் பகுதிகளிலும் மாறுவேடத்தில் போய் தன்னைப் பற்றிய விமர்சனங்களைக் கேட்டுள்ளார் என இயக்குநர் மணிவண்ணன் முன்பு கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
#115
உலக கடல் தினம் முதன் முதலாக எப்போது கொண்டாடப்பட்டது?

1992.
#116
ஜூன், 8, 1995

பிஎச்பி புரோகிராம் லாங்குவேஜ் ரஸ்மஸ் லெர்டார்ப்பால் வெளியிடப்பட்டது.
#117
Chat Box / Re: தின பலன்
Jun 08, 2010, 11:27 AM
மேஷம்- வரவு

ரிஷபம் - பயம்

மிதுனம்- நன்மை

கடகம் - செலவு

சிம்மம் - ஆதாயம்

கன்னி- சுகம்

துலாம்- நேர்மை

விருச்சிகம் -கவலை

தனுசு - தாமதம்

மகரம்- லாபம்

கும்பம் - அச்சம்

மீனம்- பகை
#118
இன்று ஒரு குறள்
மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணா ரகத்து.

விளக்கம்:
எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின்,நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல் , அவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும்
#119
Chat Box / Re: தின பலன்
Jun 05, 2010, 10:34 AM
மேஷம் - கவலை

ரிஷபம் - வெற்றி

மிதுனம் - நன்மை

கடகம் - பயம்

சிம்மம் - சுகம்

கன்னி - சிக்கல்

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - தொல்லை

தனுசு - பணிவு

மகரம் - லாபம்

கும்பம் - செலவு

மீனம் - சுகம்
#120
சனி கிரக வளையங்கள் முதன் முதலில் எப்போது புகைப்படமாக எடுக்கப்பட்டது?

1980

#121
5, ஜூன், 1968

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ராபர்ட் எப். கென்னடி லாஸ் ஏஞ்சலெஸில் சுடப்பட்டார். அடுத்த நாள் மரணமடைந்தார்.
#122
இன்று ஒரு குறள்
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

விளக்கம்:
காதலர் வந்த போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன.
#123
நேபாள நாட்டின் கடைசி மன்னர் யார்?

ஞானேந்திரா. 2001ம் ஆண்டு மன்னராக முடி சூட்டப்பட்டார்.
#124
ஜூன், 4, 1973

டொனால்ட் வெட்ஸல், டாம் பார்ன்ஸ், ஜார்ஜ் செஸ்டென் ஆகியோருக்கு ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமை கொடுக்கப்பட்டது.
#125
Chat Box / Re: தின பலன்
Jun 04, 2010, 10:49 AM
மேஷம் - தாமதம்

ரிஷபம் - சுகம்

மிதுனம்- வரவு

கடகம்- சிக்கல்

சிம்மம் - முயற்சி

கன்னி - எதிர்ப்பு

துலாம் - வெற்றி

விருச்சிகம் - கவலை

தனுசு- பயம்

மகரம்- நட்பு

கும்பம் - தடங்கல்

மீனம்- களிப்பு
#126
இன்று ஒரு குறள்
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

விளக்கம்:
உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர். அதனால் பயன் என்ன? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே.
#127
இன்று ஒரு குறள்
உழந்துழந்து உண்ணீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி யவர்க்கண்ட கண்.

விளக்கம்:
விரும்பி உள் நெகிழ்ந்து விடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!
#128
[smg id=7484 type=full]

மணிரத்னத்தின் ராவணன் திரைப்படம் வரும் ஜூன் 18ம் தேதி உலகம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

மணிரத்னம் கடந்த இரு ஆண்டுகளாக தயாரித்து இயக்கி வரும் படம் ராவணன். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தப் படம் வெளியாகிறது.

இந்தியில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடித்துள்ளனர்.

விக்ரம் முதல்முறையாக இந்தியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்திக், பிருத்விராஜ் நடித்துள்ளனர்.

தெலுங்கில் இந்தப் படம் வில்லன் என்ற பெயரில் வெளியாகிறது.

ஏஆர் ரஹ்மான் இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமடைந்துவிட்டன.

படம் வருகிற ஜூன் 18ம் தேதி உலகம் முழுக்க 1000க்கும் மேற்பட்ட பிரிண்டுகளோடு வெளியாகிறது. படத்தின் விளம்பரப் பணிகளில் மணிரத்னம் மும்முரமாக உள்ளார்.
#129
கம்யூனிச நாடு ஒன்றுக்கு பயணம் செய்த முதல் போப் யார்?

போப்பாண்டவர் 2ம் ஜான் பால். 1979ம் ஆண்டு தனது சொந்த நாடான போலந்துக்கு அவர் விஜயம் செய்தார்.
#130
ஜூன், 2, 1984

அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குள் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் ராணுவம் புகுந்து சரமாரி தாக்குதலைத் தொடங்கியது. 6ம் தேதி வரை நடந்த இதில் 5000 பேர் உயிரிழந்தனர்.
#131
Chat Box / Re: தின பலன்
Jun 02, 2010, 11:18 AM
மேஷம் - ஆதாயம்

ரிஷபம் - சுகம்

மிதுனம் -நோய்

கடகம் - கவலை

சிம்மம் - தாமதம்

கன்னி- லாபம்

துலாம் - அச்சம்

விருச்சிகம் - பகை

தனுசு - வரவு

மகரம்- பயம்

கும்பம் - நன்மை

மீனம்- செலவு
#132
இன்று ஒரு குறள்
ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

விளக்கம்:

எனக்கு இத்தகைய காமநோயைச் செய்த என் கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது காண்பதற்கு மிகவும் இனியதாகும்.
#133
மே 31, 1947

இந்த தினத்தில் தான் ஹங்கேரியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர்
#134
மே 31, 1947

இந்த தினத்தில் தான் ஹங்கேரியில் கம்யூனிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்றினர்
#135
Chat Box / Re: தின பலன்
May 31, 2010, 11:57 AM
மேஷம் - நலம்

ரிஷபம் - வளர்ச்சி

மிதுனம் - நேர்மை

கடகம் - வரவு

சிம்மம் - மகிழ்ச்சி

கன்னி - சுகம்

துலாம் - உதவி

விருச்சிகம் - போட்டி

தனுசு - பாராட்டு

மகரம் - அன்பு

கும்பம் - தெளிவு

மீனம் - உதவி
#136
இன்று ஒரு குறள்
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றா
காமநோய் செய்தஎன் கண்.

விளக்கம்:

அன்று யான் கடலிலும் பெரிதான காம நோயை அன்று எனக்குச் செய்த இக்கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.
#137
சென்னை: சிறந்த நடிகருக்கான செவாலியே சிவாஜி விருதை ரஜினியின் வீட்டுக்கே போய் வழங்கியது விஜய் டிவி.

சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்து வரும் விஜய் டி.வி.யின் விருது விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

இந்த விழாவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்பக்கலைஞர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.

ரஜினிக்கு செவாலியே விருது

'செவாலியே சிவாஜி விருது'க்கு நடிகர் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டிருந்தார். ரஜினி இந்த விழாவுக்கு வரவில்லை. இதுவரை அவர் விஜய் டிவி விருது விழாவுக்கு வந்ததுமில்லை (கமல் 50 விழாவுக்கு மட்டும் வந்திருந்தார்). எனவே விருதை ரஜினியின் வீட்டுக்கே சென்று நடிகர் பிரபுவும், அவரது அண்ணன் ராம்குமாரும் வழங்கினார்கள்.

ஏற்கெனவே ஒருமுறை சிறந்த நடிகருக்கான விருதை, பொள்ளாச்சிக்கே போய் குசேலன் படப்பிடிப்பிலிருந்த ரஜினியிடம் கொடுத்தார்கள் விஜய் டிவிக்காரர்கள்.

சிறந்த மக்கள் அபிமான ஹீரோ விருது நடிகர் விஜய்க்கும், அபிமான நடிகை விருது அனுஷ்காவுக்கும் வழங்கப்பட்டது.

நாடோடிகள் நடிகை...

சிறந்த துணை நடிகைக்கான விருது நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை அபிநயாவுக்கு வழங்கப்பட்டது. இவர் வாய் பேசமுடியாதவர்.

மிகுந்த உணர்ச்சிப்பூர்வமாக மேடைக்கு வந்த அபிநயாவுக்கு நடிகர் நந்தா, ஷக்தி, நடிகை காம்னா ஆகியோர் விருதை வழங்கினார்கள். அப்போது அவர் ரசிகர்களை பார்த்து ஆனந்த கூச்சலிட்டார். தனக்கே உரிய பாஷையில் "என் அப்பா-அம்மாவுக்கு நன்றி'' என்றார். தொடர்ந்து தன்அப்பா, நாடோடிகள் படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி, தயாரிப்பாளர் சசிகுமார் ஆகியோரையும் மேடைக்கு அழைத்தார்.

இயக்குநர் சமுத்திரக்கனியின் காலைத்தொட்டு வணங்கியவர், தனக்கு கிடைத்த விருதையும் அவர் கையில் கொடுத்து வாங்கினார். அப்போது ரசிகர்கள் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள்.


இயக்குநர் சமுத்திரக்கனி பேசும்போது, "அபிநயா என் பிள்ளை மாதிரி. படத்தில் சசிகுமாரின் தங்கையாக வாய் பேசமுடியாத அபிநயாவை நடிக்க வைக்க நான் விரும்பியபோது, சசிகுமார் "இது முடியுமா?" என்று கேட்டார். முடியும் என்றேன். என் எதிர்பார்ப்புக்கும் மேலாக அபிநயா நடிப்பில் ஆச்சரியப்படுத்தினார்'' என்றார்.

தொடர்ந்து மற்ற கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகர் விருது காஞ்சீவரம் படத்தில் நடித்த பிரகாஷ்ராஜுக்கும், சிறந்த நடிகை விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த நடிகை பூஜாவுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை 'பசங்க' படத்தில் நடித்த விமல் பெற்றுக் கொண்டார். அவருக்கு கனிமொழி எம்.பியும், நடிகை குஷ்புவும் விருதை வழங்கினார்கள்.

சிறந்த புதுமுக நடிகை விருதை நாடோடிகள் படத்தில் நாயகியாக நடித்த அனன்யா பெற்றுக்கொண்டார். சிறந்த புதுமுக டைரக்டர் விருதை 'பசங்க' படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு தயாரிப்பாளர்கள் உதயநிதி ஸ்டாலினும், துரை தயாநிதியும் இணைந்து வழங்கினார்கள்.

சிறந்த வில்லனுக்கான விருது 'நான் கடவுள்' படத்தில் நடித்த ராஜேந்திரனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகர் விருது 'சிவா மனசுல சக்தி' படத்தில் நடித்த சந்தானத்துக்கு கிடைத்தது.

விழாவில் செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி கலந்துகொண்டார்.
#138
சென்னை: தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடலை உருவாக்கிய ஏஆர் ரஹ்மானோ, படமாக்கிய நானோ அதற்காக ஊதியம் எதுவும் பெறவில்லை, என்றார்.

இதுகுறித்து கவுதம் மேனன் கூறியது:


இந்த பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் 3 மாதத்தில் இசை அமைத்துக் கொடுத்தார். 10 நாட்கள் படப்பிடிப்பு செய்தோம். ஆனால் இதில் ஹெலிகாப்டர் மூலம் 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுக்க அனுமதி பெறுவதில் சிறிது தாமதம் ஆனது. மொத்தத்தில் 3 மாதங்களில் படமாக்கி முடித்தோம்.

இந்த பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மானோ, நானோ தனிப்பட்ட முறையில் ஊதியம் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை. தயாரிப்பு செலவு மட்டும் ஆனது. 'டாப் ஆங்கிள்' காட்சிகள் எடுப்பதற்கு மட்டும் ரூ.9 லட்சம் செலவானது.

முதலில் இந்த பாடலை இயக்குவதற்கு பயத்தோடுதான் வேலை செய்தேன். இந்த பாடலில் இசையை காட்சிகள் மறைத்துவிடக் கூடாது என்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். அதுபோல் எதுவும் நடக்கவில்லை. இது 5 நிமிட பாடல், ஒரு மணி நேரம் இருந்தால் கூட அதற்குள் தமிழை அடக்கிவிட முடியாது. இருந்தாலும் 5 நிமிடத்தில் எவ்வளவு முடியுமோ அதை செய்திருக்கிறோம்.

முதல்வர் இந்த பாடலைப் பார்த்துவிட்டு தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். இதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி..." என்றார்.
#140
Advertisement of the Year.......... Fevicol !!!!!! : -

[smg id=7473 type=full]
#141
Big Bazar Women's Day Celebrations....... They have gone.... what about
you???????



[smg id=7472 type=full]
#142
excellent share....................
#143
[smg id=7471 type=full]

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர் என்று நடிகர் ரஜினி கூறினார்.

1995ம் ஆண்டில் ரிலீசான ஆர்எம்.வீரப்பன் தயாரித்து ரஜினி நடித்த பாட்ஷா திரைப்படம் தமிழக அரசியலில் பெரும் திருப்பங்கள் ஏற்படுத்தியது.

முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த ஆர்.எம். வீரப்பன் இந்தப் படத்தை தயாரித்தார். படம் மாபெரும் வெற்றி பெற்றது. வெள்ளி விழாவைத் தாண்டி ஓடியது. அதன் வெற்றி விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, தமிழகத்தில் அப்போது நடந்த வெடிகுண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டு, மாநிலத்தில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பரவி வருவதாகக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து ஆர்.எம். வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா.

அதன் பிறகு, ரஜினி அலை உருவானதும், அதன் தொடர்ச்சியாக நடந்த தேர்தலில் அந்த அலையை திமுக- தமாக கூட்டணி தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டதும் தமிழக அரசியல் சரித்திரத்தில் மறக்க முடியாத நிகழ்வுகள்.

இதையடுத்து நடந்த தேர்தல்களில் எல்லாம் ரஜினி வாய்ஸ் என்ன.. ரஜினி என்ன சொல்கிறார்.. யாரை ஆதரிக்கிறார்.. என்ற கேள்விகள் எழத் தொடங்கின.

அவரும் ஒவ்வொரு தேர்தலிலும் அப்போதையே சூழலுக்குத் தக்கவாறு யாருக்காவது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தெரிவித்து வந்தார்.

இந் நிலையில் சில 'அறிவுஜீவிகள்' அவரையே நேரடியாக அரசியலுக்கு இழுத்து வர முயன்றனர். காங்கிரஸ் பக்கம் கொண்டு போக சில தலைவர்களும் பாஜக பக்கம் இழுத்துச் செல்ல 'அறிவுஜீவிகளும்' முயன்றனர்.

ஆனால், இன்று வரை ரஜினி அந்த விஷயத்தில் 'கிரேட் எஸ்கேப்' ஆகி வருகிறார். இருந்தாலும் தேர்தல் வந்துவிட்டால் ரஜினியின் கருத்து என்ன என்று அவரை ஊடகங்கள் விரட்டுவதும், இந்தத் தேர்தலின்போது கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று 'ரீல்' விடுவதும் தொடர்கிறது.

ரஜினியோ அந்த நேரங்களில் ஊரை விட்டே எங்காவது போய்விடுவதும் தொடர்ந்து வருகிறது.

இந் நிலையில் ஆர்.எம். வீரப்பனின் மகன் தங்கராஜ் திருமணம் சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்த இந்தத் திருமணத்தில் பங்கேற்ற ரஜினி பேசுகையில், பாட்ஷா பட பிரச்சனைகள் பற்றியும் குறிப்பிட்டார். அவர் பேசியதாவது:

ரொம்ப நாட்களுக்கு பிறகு இன்று முதல்வர் கலைஞரை ஒரே மேடையில் சந்திக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஆர்.எம். வீரப்பன் எனது நீண்ட கால நண்பர். அவருக்கும் எனக்கும் உள்ள நட்பு ஆழமானது. அன்பானது.

என்னால் நிறைய பேர் லாபம் அடைந்திருக்கிறார்கள். சிலர் நஷ்டம் அடைந்துள்ளனர். அவர்களில் ஆர்.எம். வீரப்பனும் ஒருவர்.

பாட்ஷா படத்தால் உங்களுக்கு இப்படியொரு நிலைமை ஆகிவிட்டதே என்று கேட்டேன். அதற்கு அவர் இது காலத்தின் கட்டாயம் என்றார். ஆத்தீக வாதி என்றால் கடவுள் செய்தது என்பார்கள். இவர் நாத்தீக வாதியாக இருந்ததால், காலத்தின் கட்டாயம் என்றார்.

ஆர்.எம். வீரப்பன் நண்பராக மட்டுமின்றி வழி காட்டியாகவும் இருக்கிறார். என் மேல் மிகுந்த அன்பு வைத்துள்ளவர்.
பாட்ஷா படம் எனக்கு ரொம்ப பேர் வாங்கி கொடுத்தது. அதற்கு முக்கிய காரணம் ஆர்.எம். வீரப்பன். அந்த படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதில் அக்கறையும் ஈடுபாடும் காட்டினார். அவரது தயாரிப்பில் வந்த மூன்று முகம் படமும் அபாரமாக வெற்றி பெற்றது.

பாட்ஷா படம் மாதிரி மீண்டும் ஒரு படம் எடுக்க வேண்டும் என்று பலர் என்னிடம் சொன்னார்கள். அப்படி எடுத்தால் ஆர்.எம். வீரப்பன்தான் தயாரிக்க வேண்டும் என்றேன். அவரால் தான் அப்படி ஒரு படத்தை எடுக்க முடியும்.

எம்.ஜி. ஆருடன் எப்படி நட்புடன் இருந்தாரோ அதே போல் முதல்வர் கருணாநிதியிடமும் இப்போது இருக்கிறார் என்றார் ரஜினி.
#144
Bingo! Spicy Masala Remix
Bingo! Spicy Masala Remix
#145
Chat Box / Re: Happy Birthday to Dear Sajiv
May 24, 2010, 11:40 AM
Many More Happy Returns of the Day
[smg id=7460 type=full]
#146
இன்று ஒரு குறள்
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உல்வில்நோய் என்கண் நிறுத்து.

விளக்கம்:
அன்று யான் உய்யாத அளவு தீராத காம நோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர் வற்றி வறண்டு விட்டனவே.
#147

நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தது எப்போது?


ஜூலை, 21, 1969. அமெரிக்காவின் நீல் ஆம்ஸ்டிராங் நிலவில் கால் பதித்த முதல் மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்.
#148
மே, 22, 1958

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக்கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான அப்பாவித் தமிழர்களை சிங்கள வெறியர்கள் படுகொலை செய்தனர்.

#149
Chat Box / Re: தின பலன்
May 22, 2010, 02:37 PM
மேஷம் - பரிசு

ரிஷபம் - தனம்

மிதுனம் - தேர்ச்சி

கடகம்- செலவு

சிம்மம் - ஓய்வு

கன்னி - சினம்

துலாம் - நஷ்டம்

விருச்சிகம் - மறதி

தனுசு - ஆதரவு

மகரம் - பக்தி

கும்பம் - நிம்மதி

மீனம் - உயர்வு
#150
இன்று ஒரு குறள்
கதுமெனத் தாம்நோக்கித் தாமே கழலும்
இதுநகத் தக்கது உடைத்து.

விளக்கம்:

அன்று தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், தம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினை உடையதாகும்.