ஆஸி., வெறித்தனம் தொடர்கிறது.., இந்தியர் மீது

Started by Kalyan, Jan 12, 2010, 09:27 PM

Previous topic - Next topic

Kalyan

ஆஸி., வெறித்தனம் தொடர்கிறது.., இந்தியர் மீது மீண்டும் ஒரு கும்பல் தாக்குதல்

கடற்கரைக்கு காற்று வாங்க சென்ற இந்தியர் மீது ஆஸ்திரேலியாவில் வன்முறைக்கும்பல் சூழ்ந்து தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் பலத்த காயமுற்றவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இந்தியர்கள் மீது நடந்து வரும் தாக்குதலை இந்திய வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்தும் இங்கு இன வெறி நடக்கவில்லை என்றுதான் பதில் வரும். கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிதின்கார்க் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து காரில் இருந்த இந்தியர் ஒருவர் மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சித்தனர். சமீப காலமாக ஆஸ்திரேலியாவில் இந்தியர் மீதான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்தது. ஆனால் இந்தியர்கள் தாக்கப்பட்டது குறித்து விசாரித்து வருகிறோம் என்றும் பின்னர் இது இனவெறி தாக்குதல் இல்லை என்றும் ஆஸி., போலீசார்.

சப்பைக்கட்டு கட்டும்  இது குறித்து ஆஸி., அதிகாரிகள் இந்திய பத்திரிகைகள் முறையாக விசாரித்து செய்தி வெளியிட வேண்டும். இன வெறி என்று கூறக்கூடாது என்றும் கூறியிருந்தனர்.


ஓங்கி குத்து - மிதி விழுந்தது : இதற்கிடையில் சிட்னி பகுதியில் 28 வயது கொண்ட இளைஞர் பீச் பகுதியில் காற்று வாங்கி கொண்டிருந்தார், இந்நேரத்தில் 10 க்கும் மேற்பட்ட ஒரு கும்பல் இந்த இளைஞரை நோக்கி வந்தனர். அவரை பிடித்து , அடித்து உதைத்தனர். காலால் ஓங்கி மிதித்து தலை, கழுத்து பகுதியில் அடித்து துவம்சம் செய்தனர். சிலர் இவரை கையால் குத்தி தாக்கினர். இந்த தாக்குதலில் ஆஸி.,யை சேர்ந்த ஆண்களும், பெண்களும் ஈடுபட்டுள்ளனர்.  அருகில் இருந்த யாரும் எவ்வித உதவியும் செய்யவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தாக்குதலுக்குள்ளான நபர் இது குறித்து கூறுகையில் ; திடீரென வந்த கும்பல் என்மீது தாக்குதல் நடத்தினர். போலீசுக்கு தகவல் கொடுத்து 40 நிமிடம் கழித்து வந்தனர். அதற்குள் இந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர்.


ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட அவருக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இதில் முதுகு, கழுத்து, தலை பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கம் போல் இனவெறி அல்ல என்றுதான் பதில் வரும்.