ரஹ்மானுக்கு கிராம்மி கிடைக்குமா?

Started by rajoe, Dec 04, 2009, 10:13 AM

Previous topic - Next topic

rajoe

லாஸ்ஏஞ்சல்ஸ்: இசை உலகின் ஆஸ்கார் என்று போற்றப்படும் 'கிராம்மி' விருதுக்கு ஏ ஆர் ரஹ்மான் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ரஹ்மானுக்கு இரட்டை ஆஸ்கர் பெற்றுத் தந்த ஸ்லம்டாக் மில்லியனேர் படம்தான், இந்த கிராமி விருதுக்கும் அவர் பெயரை கொண்டு சென்றுள்ளது.

2010-ம் ஆண்டுக்கான சிறந்த இசைக்கலைஞர்களுக்கான கிராமி விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 31-ந் தேதி லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது.

இந்த உயரிய விருதுக்கு பிரபல இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. 'ஸ்லம்டாக் மில்லினர்' படத்தின் சிறந்த ஒலிப்பதிவுக்காக அவரது பெயர் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல் சினிமா, டெலிவிஷன் மற்றும் இதர படங்களுக்காக எழுதப்பட்ட சிறந்த பாடல் என்ற பிரிவுக்கும் ஸ்லம்டாக் மில்லினர் படத்தின் 'ஜெய் ஹோ' பாடல் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இன்குளோரியஸ் பாஸ்டர்ட்ஸ், காடில்லாக் ரெகார்ட்ஸ், ட்ரூ பிளட், டுவிலைட் ஆகிய படங்கள் ரஹ்மானின் ஸ்லம்சாக் மில்லியனேர் ஒரிஜினல் ஸ்கோருடன் போட்டியிடுகின்றன.