தேங்காய் எண்ணெய், கொப்பரை ஆன்லைன் வர்த்தĨ

Started by Power of silence, Jul 25, 2009, 05:53 PM

Previous topic - Next topic

Power of silence

மத்திய அரசின் உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் எப்.சி.இ.ஐ அமைப்பின் மூலம், தமிழ்நாட்டில் முதன் முறையாக காங்கேயத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் கொப்பரை ஆன்லைன் வர்த்தகம் சனிக்கிழமை துவங்கப்படுகிறது.
இந்த அமைப்பு எண்ணெய் உற்பத்தியாளர்கள், வியாபாரிகளால் நடத்தப்படும் அரசு அங்கீகாரம் பெற்ற சுதந்திரமான எதிர்கால வர்த்தக நோக்கு நிறுவனமாகும்.

இது குறித்து கொச்சியில் செயல்படும் இந்நிறுவனத்தின் தென்னிந்திய கிளை அலுவலக தலைவர் கே.கே.நிஜாம் மற்றும் இயக்குநர் பொள்ளாச்சி சி.எம்.காமராஜ் ஆகியோர் கூறுகையில், இன்டர்நெட் மூலம் நடைபெறும் ஆன்லைன் எதிர்கால வர்த்தகத்தின் நோக்கம் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் சரியான விலையை ஏற்படுத்தி நிலையான வியாபாரத்தை நடைமுறையில் கொண்டு வருவதாகும்.

இதில் பொருட்களை வாங்க, விற்க 6 மாத சந்தா தொகையாக ரூ.1000 செலுத்தி உறுப்பினராக சேர வேண்டும். தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், தேங்காய் விவசாயிகள், கொப்பரை வியாபாரிகள், எண்ணெய் வியாபாரிகள், தனி நபர்கள் உறுப்பினராகச் சேரலாம்.

நான்கு மாதங்களுக்கு முன்பே விலையை நிர்ணயம் செய்யவும், விற்பனை செய்யவும் வாய்ப்பு உள்ளது. பொருட்கள் இருப்பு வைக்கும் வசதியும் உண்டு. தனி நபரால் வர்த்தகம் ஸ்தம்பித்து போவதை தடுக்க இவ்வளவு தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்கிற கட்டுப்பாடு உள்ளது.
வங்கிகள் மூலம் பணப் பட்டுவாடா நடைபெறுகிறது. நிறுவனம் வர்த்தகத்துக்காக மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.24 வீதம் கமிஷன் பெற்றுக் கொள்கிறது.

பொருட்களை வாங்குபவர்கள் மொத்த தொகையில் 10 விழுக்காடு மட்டும் செலுத்தினால் போதும். மீதி தொகைக்கும், தரம், அளவு, டெலிவரிக்கும் நிறுவனமே உத்திரவாதம் அளித்து வியாபாரத்தை நடத்தும் என்று தெரிவித்தனர்.

MANISEKAR